கேரளாவின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர், மகன் ஆதிதேவ், மனைவி அனிலாவுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், ஜெயப்பிரகாஷ் அவருடைய அண்டை வீட்டில் வசிக்கும் ஜித்தேஷ் என்பவருடன் தொழில் கூட்டாளியாக இருந்துவந்தார். ஜித்தேஷுக்கு ஜெயபிரகாஷுடன் சில நிதி தொடர்பான பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஜெயப்பிரகாஷ் குடும்பத்தின் மீது ஜித்தேஷ் வெறுப்புடன் இருந்ததாகத் தெரிகிறது.கொலை
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தாய் அனிலாவுடன் மகன் ஆதிதேவ் அங்கன்வாடிக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரே வந்த ஜித்தேஷ் கூரிய ஆயுதங்களால், ஆதிதேவையும் அனிலாவையும் தாக்கியிருக்கிறார். இதனால் ஆதிதேவுக்கு தலை, முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும், அனிலாவுக்கும் தோள் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஆதிதேவ். குற்றம்சாட்டப்பட்ட ஜித்தேஷ் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, காவல்துறை அவரைக் கைதுசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.காதலியின் மகளை கொலை செய்து பிணத்துடன் உறவு... நகை , பணத்துடன் தப்பிச்சென்ற நபர் மும்பையில் கைது!
http://dlvr.it/Sd43FH
Sunday, 20 November 2022
Home »
» அங்கன்வாடிக்குச் சென்ற 4 வயது குழந்தை கொலை... தந்தையின் தொழில் கூட்டாளி வெறிச்செயல்!