உத்தரப்பிரதேச மாநில, மதுரா காவல்துறையினர் கடந்த 2018 - 2019-ம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் என்டிபிஎஸ் சட்டத்தின் (NDPS Act ) கீழ் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதன் விலை ரூ.60 லட்சம் என மதிப்பிடப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஷெர்கார் மற்றும் நெடுஞ்சாலை காவல் நிலையங்களின் கிடங்குகளில் சேமித்துவைக்கப்பட்டது. மேலும், கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை நடந்துவந்தது.கஞ்சா
இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதிசெய்ய அவர்கள் கடத்திய கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அப்போது மதுரா காவல்துறை, கஞ்சா மாதிரிகளைச் சமர்ப்பித்திருக்கிறது. அதற்கு நீதிபதி பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து கஞ்சாவையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார். அப்போதுதான் அந்த அதிர்ச்சித் தகவலை காவல்துறை சொல்லியிருக்கிறது. எலி
காவல்துறை சமர்ப்பித்த அறிக்கையில், " காவல் நிலையத்தில் எலித் தொல்லை அதிகமாக இருக்கிறது. கிடங்கில் சேமித்துவைக்கப்பட்டிருந்த 581கிலோ கஞ்சாவையும் எலிகள் தின்றுவிட்டன. எங்களிடம் மாதிரி மட்டுமே இருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, நீதிபதி, எஸ்எஸ்பி மதுரா அபிஷேக் யாதவ்," 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை எலிகள் உண்மையில் சாப்பிட்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். வரும் 26-ம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும்" என உத்தரவிட்டிருக்கிறார்.
விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீஸார் வேறொருவரிடம் விற்றுவிட்டு எலிகள் மேல் பழிசுமத்தியதாகக் கூறப்படுகிறது.அவசரகதி அரசு மருத்துவக் கல்லூரி... ‘சோதனை எலி’களான மாணவர்கள்!
http://dlvr.it/SdLKwZ
Friday, 25 November 2022
Home »
» ``581 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டது" - நீதிமன்றத்தில் காவல்துறை பகீர் தகவல்!