கேரள மாநிலத்தில் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும் என்ற முடிவைத் திரும்பப் பெறுவதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு கூறியுள்ளது.
கேரள மாநிலத்தில் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 56. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளாவில் தான் விரைவிலேயே ஓய்வு வழங்கப்படுகிறது. இதை அதிகரிக்க கோரி 2022-ஆம் ஆண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கேரள அரசு``எலான் மஸ்க் கையில் சிக்கியது ட்விட்டரா அதன் பயனர்களா?'' ஓர் அலசல்!
இந்நிலையில் சனிக்கிழமையன்று, பொதுத்துறை நிறுவனங்களின் ஊதியம் மற்றும் அதன் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்ட நிபுணர் குழு பரிந்துரையின் படி, மாநிலத்தில் பொதுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதும், எதிர்க்கட்சிகள் தங்களின் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் அகில இந்திய இளைஞர் அணி கூட்டமைப்பு போன்ற இடதுசாரி அமைப்புகளும் இந்த அறிவிப்பு இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.கேரள அரசு``எலான் மஸ்க்குக்கு உதவும் ஸ்ரீராம் கிருஷ்ணன்...'' யார் இவர்?
அதோடு, ``ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான நடவடிக்கை முற்றிலும் தவறானது, இது சமூகச் சூழல் மற்றும் வேலைவாய்ப்பின்மையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து, உத்தரவைத் திரும்பப் பெறுமாறு கூறியிருந்தார்.
இந்நிலையில், பல பக்கங்களில் இருந்தும் கண்டனங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தும் முடிவை ரத்து செய்வதாக அறிவித்தது.
http://dlvr.it/ScCP9z
Friday, 4 November 2022
Home »
» ``பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயது 60''; இளைஞர்களுக்கு துரோகம்.. கேரள அரசின் முடிவு என்ன?