உத்தரப்பிரதேசத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்று ஆங்கில எழுத்துகளிலிருந்து வரலாறு, புராண அறிவை வழங்கும் நோக்கத்துடன் அல்பபெட்ஸை (Alphabets) வித்தியாசமான முறையில் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படும் சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது. A என்ற எழுத்துக்கு `ஆப்பிள்’ என்று படித்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக A என்ற எழுத்துக்கு `அர்ஜூனா’ எனப் பள்ளியின் பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவிலுள்ள அமினாபாத் இன்டர் என்ற தனியார் பள்ளியில், மாணவர்களுக்கு ஆங்கில எழுத்துகளுக்கு வழங்கப்படும் அல்பபெட்ஸ் (Alphabets) ABC... தொடரில் A என்ற எழுத்துக்கு அர்ஜூனா, B என்ற எழுத்துக்கு பலராமா, C என்ற எழுத்துக்கு சாணக்கியா, D என்ற எழுத்துக்கு துருவன், E என்ற எழுத்துக்கு ஏகலைவ்யா, F என்பது நான்கு வேதங்கள், G என்ற எழுத்து காயத்ரி, H என்ற எழுத்து ஹனுமான், I என்ற எழுத்து இந்திரன் என்று பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
இதுபோல ஒவ்வோர் ஆங்கில எழுத்துக்கும் இந்து புராணங்களிலும், வரலாறுகளிலும் உள்ள குறிப்பிடத்தக்க நபர்களின் பெயரை வைத்திருக்கின்றனர். மேலும், பள்ளியால் உருவாக்கப்பட்ட எழுத்துகள் விளக்கப்படத்தில் புராண, வரலாற்று நபர்களின் பெயர்கள், படங்கள் இருப்பது மட்டுமல்லாமல், அவர்களைக் குறித்த விளக்கங்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக, அர்ஜூனன் ஒரு 'சிறந்த போர்வீரன்' என்றும், சாணக்யா 'சிறந்த ஆசிரியர்' என்றும் விவரிக்கப்பட்டிருக்கிறது.பள்ளிப் பாடப்புத்தகம்
இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய பள்ளியின் முதல்வர் சாஹேப் லால் மிஸ்ரா, ``மாணவர்களுக்கு இந்திய கலாசாரம் பற்றிய அறிவு குறைவாக இருக்கிறது. எனவே, மாணவர்களின் அறிவை மேம்படுத்தவும், இந்திய கலாசாரத்தை எடுத்துரைக்கும் வகையிலும் நாங்கள் இந்தப் புது முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். இந்தி எழுத்துகளிலும் இதே முறையைப் பின்பற்ற முயன்றுவருகிறோம். இந்தியில் அதிக எழுத்துகள் இருப்பதால், அதன் செயல்முறைக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது'' என்றார்.
இந்தப் பள்ளி, 1897-ல் நிறுவப்பட்டது. இது 125 ஆண்டுகள் பழைமையானது. இந்தப் பாடப் புத்தகம் குறித்தான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பேசுபொருளாக மாறிவருகிறது.``இந்த புத்தகம் உங்கள் வீட்டிலிருந்தால், திருச்சியே உங்களிடமிருப்பதாக அர்த்தம்"- கவிஞர்.நந்தலாலா
http://dlvr.it/Sc8DBS
Thursday, 3 November 2022
Home »
» உ.பி: A ஃபார் அர்ஜூனா... B ஃபார் பலராமா... பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஏபிசிடி வரிசை!