மத்தியப் பிரதேச மாநிலத்தின் கோஹ்-இ-ஃபிசா பகுதியில் அஸ்மா ஃபரூக் (67) என்ற பெண் தன் இரண்டு மகன்களுடன் வசித்து வந்திருக்கிறார். இவருடைய மூத்த மகன் ஃபர்ஹான் (32), பி.காம் பட்டதாரி. ஃபர்ஹானின் திருமணப் பேச்சு அடிபட்டபோது, அஸ்மா ஃபரூக், ``திருமணம் நடத்திவைக்க வேண்டுமென்றால், வேலைக்குச் செல்ல வேண்டும். அதுவரை திருமணம் வேண்டாம்'' எனக் கூறியிருக்கிறார்.கைது
இதனால் ஆத்திரமடைந்த ஃபர்ஹான் கிரிக்கெட் மட்டையால் அஸ்மா ஃபரூக்கை தாக்கியிருக்கிறார். படுகாயமடைந்த அஸ்மா ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்திருக்கிறார். அப்போது வீட்டுக்கு வந்த இரண்டாவது மகன் அதாவுல்லா, ஃபர்ஹான் ரத்தக்கறை படிந்த பேட்டை வைத்துக்கொண்டு நின்றிருப்பதை பார்த்து விசாரித்தபோது, `அம்மா மாடியிலிருந்து விழுந்துவிட்டார்' எனப் பொய் சொல்லியிருக்கிறார். உடனே, அதாவுல்லா அஸ்மா ஃபரூக்கை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.காவல்துறை
ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அஸ்மா ஃபரூக் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதன் பிறகே அதாவுல்லாவுக்கு நடந்த உண்மை தெரியவந்திருக்கிறது. மேலும், ஃபர்ஹான் நடந்த உண்மையை வெளியே சொல்லக்கூடாது என அதாவுல்லாவை மிரட்டியிருக்கிறார். ஆனால், அதாவுல்லா இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், காவல்துறை ஃபர்ஹானை கைதுசெய்து விசாரத்து வருகிறது.60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; சிக்கிய நபர் - தஞ்சை அதிர்ச்சி
http://dlvr.it/ScbNh6
Friday, 11 November 2022
Home »
» ``வேலை கிடைக்காமல் திருமணம் வேண்டாம்'' - கண்டிஷன் போட்ட தாய்... மட்டையால் அடித்துக் கொன்ற மகன்!