கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி தங்களை "கருணை கொலை" செய்யும் படி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.
கர்நாடகா, சிவ்மோகா மாவட்டம் சாகர் அருகே உள்ள குக்வே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் நாயக், சுஜாதா நாயக் தம்பதியர். இவர்களுக்கு கண்டிகா கிராம பஞ்சாயத்து எல்லையில் நிலம் இருக்குறது. அதில் கட்டடவேலை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அப்ரூவல் பெறவேண்டும். இந்த நிலையில் அதிகாரிகள் லேஅவுட்டுக்கு அப்ரூவல் கொடுக்காமல், லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனைக்கு உள்ளான இந்த தம்பதியர் , இது குறித்து கடந்த நவம்பர் 9 -ம் தேதி சாகர் உதவி ஆணையரிடம் தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் தங்கள் புகாரை சாகர் உதவி ஆணையர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பியுருக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீகாந்த் நாயக், ``நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு கண்டிகா கிராம பஞ்சாயத்து எல்லையில் நிலம் இருக்குறது. இது தொடர்பான ஆவணங்களைச் சரி செய்ய பஞ்சாயத்து வளர்ச்சித் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். பஞ்சாயத்து அலுவலகத்தில் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள். தாலுக்கா அலுவலகத்தில் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள்.எங்களை பிச்சைக்காரர்கள் போல நடத்துகிறார்கள்.திரௌபதி முர்மு
நாங்கள் சாவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. எங்கள் நிலம் தொடர்பான பத்திர வேலைகளுக்காகக் லஞ்சம் கொடுத்துக் கொடுத்து களைத்துப் போனோம். அந்த அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதோடு, துன்புறுத்தவும் செய்கிறார்கள். எங்கள் நிலத்தை அரசே கையகப்படுத்திவிட்டு,. எங்களைச் சாக அனுமதிக்க வேண்டும்", என்று அந்த மனுவில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, உயர் அதிகாரி ஒருவர், ``அந்த தம்பதியர் கொடுத்த, புகாரின் உண்மைத்தன்மைகளை ஆராய்ந்து பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார் .``நிலநீர் எடுப்பு சான்று வேணும்னா ரூ.50,000 லஞ்சம் கொடு!’’ - நீர்வளத்துறை அதிகாரி சிறையிலடைப்பு
http://dlvr.it/SchPqM
Sunday, 13 November 2022
Home »
» லஞ்சம் கேட்ட அரசு அதிகாரிகள்... `கருணை கொலை’க்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கு தம்பதியர் கடிதம்!