கேரள மாநில கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சிவன்குட்டி. இவர் ஃபேஸ்புக் பேஜில் தனது புரொபைல் போட்டோவை நேற்று மாற்றி அமைத்தார். அந்த போட்டோவில் அமைச்சர் சிவன்குட்டி காரில் இருப்பது போன்றும், காருக்கு வெளியிலிருந்து சில மாணவிகள் செல்ஃபி எடுப்பது போன்றும் இருந்தது. அந்த போட்டோவில் அமைச்சரின் வயிற்றுப்பகுதி சற்று பெரிதாக தெரிந்திருக்கிறது. அமைச்சரின் புரொபைல் போட்டோவிற்கு பலர் கமென்ட்டை பதிவிட்டிருந்தனர். சிலர் அவரை "ஹாய் மந்திரி அப்புப்பா" (அமைச்சர் தாத்தா) என கிண்டலடித்திருந்தனர். அப்போது கமென்ட்டில் ஒருவர் "சகாவே வயிற்றைக் கொஞ்சம் குறைக்க வேண்டும் கேட்டீர்களா..." எனத் தெரிவித்திருந்தார்.கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி
அதற்கு பதிலளித்த அமைச்சர் சிவன்குட்டி, "பாடி ஷேமிங் இந்த காலத்தில் மிகவும் கேவலமான விஷயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது."இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானது. யாரையும் உடலைக் குறிப்பிட்டோ அல்லது வேறு எதற்காகவோ கேலி செய்யாதீர்கள்" என காட்டமாகியிருந்தார் அமைச்சர் சிவன்குட்டி." என காட்டமாகியிருந்தார். இதையடுத்து அமைச்சரின் கருத்துக்கு பின்னூட்டமிட்ட அந்த ஐ.டி, "வயிற்றை குறைப்பது பற்றி நான் கூறியது பாடி ஷேமிங் என்றால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
சர்க்கரை நோயாளிகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிடாதீர்கள். உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்தால் போதும். சமீபகாலமாக உங்கள் உடல்நிலையில் அக்கறை காட்டாததால்தான் இப்படிக் கருத்து சொல்ல நேர்ந்தது. உங்கள் தொகுதியின் உறுப்பினராக இது என்னுடைய கடமையும் கூட" என கூறியிருந்தார்.
http://dlvr.it/Sckf3c
Monday, 14 November 2022
Home »
» `சகாவே வயிற்றைக் கொஞ்சம் குறையுங்கள்'
ஃபேஸ்புக்கில் அமைச்சரிடம் வம்பிழுத்த நபர்!