கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா என்பவர், `மசூதி வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தை, புல்டோசர்கொண்டு தரைமட்டமாக்கிவிடுவேன்' என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களை வைத்துப் பார்க்கையில், மைசூர்-ஊட்டி சாலையில் மசூதி வடிவில் பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.மசூதி வடிவில் பேருந்து நிலையம்
இது தொடர்பாகப் பேசிய பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா, ``சமூக வலைதளங்களில் அதை நான் பார்த்தேன். அதில், பேருந்து நிலையம் ஒன்றின் மேல், பெரிய குவிமாடமும் அதன் இருபக்கமும் சிறிய அளவிலான குவிமாடங்களும் இருக்கின்றன. அதுவொரு மசூதி மட்டுமே. இன்னும் மூன்று, நான்கு நாள்களில் அந்தக் கட்டடத்தை இடிக்குமாறு பொறியாளர்களிடம் கூறியிருக்கிறேன். பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹா - கர்நாடகா
அப்படி அவர்கள் செய்யவில்லையென்றால், நானே அதை புல்டோசர்கொண்டு தரைமட்டமாக்குவேன்" என்று கூறினார்.
பிரதாப் சிம்ஹா-வின் இத்தகைய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் சலீம் அகமது, ``இது மைசூரு எம்.பி-யின் முட்டாள்தனமான கருத்து. அப்படியென்றால் குவிமாடம் இருக்கும் அரசு அலுவலகங்களையும் அவர் இடிப்பாரா?" என விமர்சனம் செய்திருக்கிறார். ``முஸ்லிம் நபர் எனக்கு உணவு டெலிவரி செய்யக் கூடாது..!" - இணையத்தில் விவாதப்பொருளான ஸ்க்ரீன்ஷாட்
http://dlvr.it/Scnk0M
Tuesday, 15 November 2022
Home »
» கர்நாடகா: `மசூதி வடிவில் பேருந்து நிலையம்; புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குவேன்!' - பாஜக எம்.பி