கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அதிகளவில் ரசிகர்களைக் கொண்டது, கால்பந்து விளையாட்டு. ஆனால் கேரளாவில் கிரிக்கெட்டை விட, கால்பந்துக்குத்தான் ரசிகர்கள் அதிகம். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பபாக சென்ற நிலையில் ஆசிய அணிகளின் எழுச்சி இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.Naaji Noushi `2009,2010,2011,2012,2015,2019'-
6-வது முறையாக சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதை வென்ற மெஸ்ஸி
சமீபத்தில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மாருக்கு ரசிகர்கள் பிரமாண்ட பேனர்கள் வைத்து அசத்தினர். அதுமட்டுமல்ல... கத்தார் நாடு இந்தியாவுக்கு அருகில் இருப்பதால், ஏராளமான ரசிகர்கள் மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் காண கத்தார் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் காண கேரளாவைச் சேர்ந்த, ஐந்து குழந்தைகளின் தாயான பெண் ஒருவர்காரிலேயே கத்தார் சென்றடைந்த சாகசம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த கால்பந்து தீவிர ரசிகையான நாஜி நெளஷி, கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரை நேரில் காண, இந்தியாவில் இருந்து கத்தாருக்கு மஹிந்திரா தார் வாகனத்தில் சோலோ ட்ரிப் சென்றுள்ளார்.Naaji Noushi
காரிலேயே அரிசி, தண்ணீர், பருப்பு, சமையலுக்குத் தேவையான பொருள்களுடன் பழங்களையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார் நாஜி நெளஷி. பயணத்தின் போது முடிந்த அளவு சமையல் செய்து சாப்பிடுவதால் செலவு குறைவவதால் இப்படி முன்னேற்பாடுடன் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாஜி கேரளாவில் இருந்து காரில் புறப்பட்டு மும்பை சென்றுள்ளார். மும்பையில் இருந்து கப்பல் மூலம் ஓமனுக்கு காரை கொண்டு சென்ற அவர், மஸ்கட் வழியாக கத்தார் வந்து சேர்ந்துள்ளார். Naaji Noushi
இப்படி பயணம் செய்த நாஜி அர்ஜென்டினா ஜெர்சியுடன் மஹிந்திரா காரில் புகைப்படம் எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பயணம் குறித்து நாஜி நெளஷி கூறும் போது, ``மெஸ்ஸிதான் என் ஹீரோ. சவுதி அரேபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்தது சோகம் அளித்துள்ளது. ஆனால் உலகக்கோப்பையை கைப்பற்றும் பயணத்தில் இது ஒரு சின்ன சறுக்கல் மட்டும் தான். நான் என் ஹீரோவை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மட்டுமே பயணித்து வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SdTM5B
Monday, 28 November 2022
Home »
» `என் ஹீரோவை பார்க்கணும்!’ - மெஸ்ஸியின் ஆட்டம் காண காரிலேயே கத்தார்; அசரவைத்த கேரள அம்மா