உத்தரப்பிரதேச மாநிலம், சம்பால் பகுதியில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை இன்னும் தொடர்வதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு திருமணம் செய்யும் பட்டியலினத்தவர்கள் மணமகன் ஊர்வலத்தில் குதிரைச் சவாரி, கார் சவாரி, DJ கச்சேரி போன்றவற்றுக்கு மற்ற பிரிவினர் அனுமதிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. அதையும் மீறி இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தால், அவர்கள்மீது பிற சமூக மக்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சம்பால் மாவட்டத்தின் குன்னவுர் பகுதியிலுள்ள லோஹமாய் கிராமத்தில் ராம் கிஷண், ரவீனா ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, மணமகள் ரவீனா, தன்னுடைய வருங்காலக் கணவர் குதிரை ஊர்வலம் செல்வதைப் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தார். மணமகள் வீட்டினர் அதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். திருமணத்தன்று ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாதென எச்சரிக்கையாக காவல்துறையிடம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மணமகள் வீட்டினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.பாதுகாப்பளித்த காவலர்கள்
இந்த வேண்டுகோளை ஏற்ற காவல்துறை, திருமண ஊர்வலத்தின்போது, அருகிலிருந்த காவல் நிலையங்களிலிருந்து ஒரு பெரிய காவலர் குழுவை அனுப்பியிருக்கிறது. அந்தக் குழுவில் 2 இன்ஸ்பெக்டர்கள், 14 சப் இன்ஸ்பெக்டர்கள், 44 காவலர்கள் என 60 பேர் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தத் தம்பதிக்குக் காவலர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.11,000 திருமணப் பரிசாகவும் வழங்கியிருக்கின்றனர்.`பெண்கள் மட்டுமே உடலை சுமந்து சென்றது ஏன்?' - காவேரி அம்மாளின் இறுதி ஊர்வலம் குறித்து அவரின் மகன்
http://dlvr.it/SdXPqh
Tuesday, 29 November 2022
Home »
» தலித்துகளுக்கு ஊர்க் கட்டுப்பாடு: உபி-யில் காவலர்கள் புடைசூழ பாதுகாப்புடன் நடந்த மணமகன் ஊர்வலம்!