மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் 4 வயது சிறுமி, கந்த்வா எனும் பகுதியிலுள்ள கரும்புத் தோட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, புதருக்குள் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்தூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறை கைதுசெய்தது. மத்தியப் பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர்
இந்த நிலையில், மத்தியப் பிரதேச பா.ஜ.க அமைச்சர் உஷா தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``பல்வேறு வழிகளில் நாம் சமூகத்தை அறிவூட்ட வேண்டும். இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் எப்படி ஈடுபடுகிறார்கள்... இது போன்ற குற்றவாளிகளுக்கு, பொது மேடையில் தண்டனை வழங்க வேண்டும் என்று நான் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகானிடம் கோரிக்கை விடுக்கிறேன். குற்றம்சாட்டப்பட்டவருக்கு சிறையில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அது எப்படி நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.தூக்கு
சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக பிடிபட்ட இரண்டு குற்றவாளிகளையும் கந்த்வா நகரத்திலுள்ள ஒரு பொது மேடையில் பகிரங்கமாகத் தூக்கிலிட்டால், அத்தகைய நபர்கள் இனி எந்தவொரு பெண்ணையும் தொடுவதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிப்பார்கள். இது போன்ற தண்டனை மற்றவர்களுக்கு வலுவான பாடமாக இருக்கும். மேலும், இது போன்ற குற்றங்களில் யாரும் ஈடுபடத் துணிய மாட்டார்கள்" என்றார்.60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; சிக்கிய நபர் - தஞ்சை அதிர்ச்சி
http://dlvr.it/ScGKxC
Saturday, 5 November 2022
Home »
» ``பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைப் பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்" - ம.பி அமைச்சர் காட்டம்