பாலிவுட் நடிகை சன்னி லியோன் என்றாலே அனைவருக்கும் தெரியும். ஆரம்ப காலத்தில் ஆபாச பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன், இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் படங்களுக்கு எப்போதும் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது..ஆம்புலன்ஸ்வணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர்! - தெளிவாக விளக்கும் புத்தகம்
அவர் நடிக்கும் படத்தில் ஆபாச காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று கூறுவார்கள்.
விலங்குகள் நலனுக்காக பாடுபடும் பீட்டா, அனிமல் ஹோப், வெல்னஸ் பவுண்டேசன் போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து விலங்குகள் நலனுக்காக பாடுபட்டு வரும் சன்னி லியோன், தனது கணவர் டேனியலுடன் சேர்ந்து தெருவோர விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளார்.
இது குறித்து இருவரும் சேர்ந்து அளித்த பேட்டியில், ''தெரு நாய்கள் கைவிடப்பட்ட பிராணிகள் கொடூரமாக தாக்கப்படுவதும், விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதுமான செய்திகளை அடிக்கடி படிக்கிறோம். அந்த பாதிப்பில் இருந்து விலங்குகளை காப்பாற்ற இந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி இருக்கிறோம். மனிதர்களைப்போல் வளர்ப்பு பிராணிகள் மற்றும் தெருவிலங்குகளுக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்று நம்புகிறோம், அதனால் தான் விலங்குகளுக்காக இந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளோம்.''என்று தெரிவித்தார்.பீட்டாகடந்த 50 ஆண்டுகளில் 70% காட்டு விலங்குகள் அழிப்பு... கானமயில்கள், ஆசிய சிங்கம், பனிக்கரடி... இனி?!
சன்னிலியோன் கணவர் டேனியல் இது குறித்து கூறுகையில், ''தெரு நாய்களின் மறுவாழ்வுக்காக பல ஆண்டுகளாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இவற்றுக்கு எளிதில் மருத்துவ உதவி கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது தொடங்கப்பட்டு இருக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அதன் இறப்பு குறையும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் சோலங்கி இது குறித்து கூறுகையில், ``சன்னி லியோன் மற்றும் டேனியல் ஆகியோர் கொரோனா காலத்தில் தெரு நாய்களுக்கு சாப்பாடு கொடுக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டனர். அதனால் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறோம்" என்று தெரிவித்தார்.
http://dlvr.it/SdXQ5C
Tuesday, 29 November 2022
Home »
» தெரு நாய்களுக்கு
ஆம்புலன்ஸ் சேவையை
தொடங்கிய நடிகை சன்னிலியோன்!