குடிபோதையில் சிலர் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்துவிட்டு போதை தெளிந்த பிறகுதான், `நாம் இப்படி எல்லாமா செய்தோம்?’ என்று நினைப்பதுண்டு.
மும்பை வசாய் பகுதியை சேர்ந்தவர் பீட்டர். மீனவரான இவருக்கு மீன்பிடி படகு இருக்கிறது. இப்படகில் உதவியாளராக விகாஸ் தங்கடா என்பவர் இருக்கிறார். கடந்த 31-ம் தேதி வசாய் கடற்கரையில் கட்டியிருந்த பீட்டரின் மீன்பிடி படகை திடீரென காணவில்லை. படகின் உதவியாளர் விகாசையும் காணவில்லை. இதனால் பீட்டர் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து கடலோர பாதுகாப்பு படையின் துணையோடு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடலோர பாதுகாப்பு படையினர் அதிவிரைவு படகு, ஹெலிகாப்டர் உதவியோடு காணாமல் போன படகை தேடினர். விகாஸ் மற்றும் காணாமல் போன படகு புகைப்படத்தை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா மீனவர்களுக்கு அனுப்பி தேடி வந்தனர். அதனை பார்த்துவிட்டு சதீஷ் என்பவர் காணாமல் போன படகு ராய்கட் மாவட்டத்தில் ஸ்ரீவர்தன் என்ற இடத்தில் நிற்பதாக தகவல் கொடுத்தார். சதீஷ்
முதலில் அந்தப்படகு குறித்து மும்பையை சேர்ந்த ரவி என்ற மீனவரிடமிருந்து ஸ்ரீவர்தன் பகுதி மீனவர் சங்க தலைவர் பிலிப்பிற்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் வந்தது. இது குறித்து சதீஷுக்கும் வாட்ஸ் ஆப் வந்தது. வாட்ஸ் ஆப்பில் இருப்பது போன்ற படகு அங்கு தரை தட்டி நிற்பதை பார்த்து உடனே மற்றவர்களுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து படகு உரிமையாளர் பீட்டருக்கு தகவல் கிடைத்தது. பீட்டர் இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் ஆட்களை அனுப்பி அங்கிருந்து படகை மும்பைக்கு கொண்டு வந்தனர். அப்படகில் இருந்த விகாஷிடம் விசாரித்த போது குடிபோதையில் படகை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பீட்டர் கூறும் போது, ``மறுநாள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டும் என்பதால் கடலில் பயன்படுத்த அன்றாட தேவையான உணவு பொருள்கள், ஐஸ் மற்றும் டீசல் போன்றவற்றை படகில் நிரப்பி இருந்தோம். காலையில் படகில் மீன்பிடிக்க செல்லலாம் என்று பார்த்தால் படகை காணவில்லை. எனது படகை கடலில் பார்த்ததாக சக மீனவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதனால் படகு திருடப்பட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டது. படகு மூலம் தான் எனக்கு வருமானம் கிடைத்து வந்தது” என்று தெரிவித்தார். படகில் இருந்த விகாஷிடம் விசாரித்த போது இரவில் படகில் இருந்த போது மது அருந்தியதாகவும், கடலில் தெரிந்த கலங்கரை விளக்கின் வெளிச்சம் எங்கு இருக்கிறது என்பதை தேடி படகில் புறப்பட்டதாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார். மீட்கப்பட்ட படகு மற்றும் சதீஷ்
மேலும், கடலில் சென்ற போது திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதால் படகு அப்படியே நின்றுவிட்டதாக தெரிவித்தார். போலீஸார் படகையும், விகாசையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடலுக்குள் எடுத்துச்செல்லப்பட்ட படகின் விலை ரூ.40 லட்சமாகும். மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக படகில் வந்து தாக்குதல் நடத்திய பிறகு கடலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு படகு காணாமல் போனாலும் உடனே இது குறித்து கடலோரபடைக்கும் தகவல் கொடுக்கவேண்டும். எனவேதான் பீட்டரின் படகு காணாமல் போனபோது கடலோர பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் உதவியோடு அந்தப் படகை தேடினர்.வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய ரப்பர் படகு... போலீஸில் சிக்கிய போலாந்து இளைஞர் - பின்னணி என்ன?!
http://dlvr.it/ScJY32
Sunday, 6 November 2022
Home »
» கடலில் தெரிந்த லைட்ஹவுஸ் வெளிச்சம்; படகில் கிளம்பிய போதை ஆசாமி! - நடுக்கடலில் தீர்ந்த எரிபொருள்