முல்லை பெரியாறு அணை நீரை நம்பி தமிழகத்தில் 2,57,000 ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயம் மட்டுமல்லாது தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. லோயர் கேம்ப் முல்லை பெரியாறு முல்லைப்பெரியாறு... அணை திறக்கும் உரிமையை விட்டுக்கொடுத்ததா தமிழகம்? - கொந்தளிக்கும் விவசாயிகள்!
1979 முதல் அணை பலவீனமாக உள்ளது எனக் கூறி கேரள தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு, 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் 2014, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அணையில் 142 அடி நீர் தேக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு 4-வது முறையாக 142 அடியை எட்டியது.
அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகத் தொடர்மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. அதன் காரணமாக அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்தது. தற்போது 5-வது முறையாக அணை 142 அடியை எட்டியுள்ளதால், தமிழக விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் அணையின் உறுதித் தன்மையும் மீண்டும் நிரூபித்து காட்டப்படும் என்று தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.முல்லை பெரியாறு அணைமுல்லைப்பெரியாறு அணை: `பாதுகாப்பில்லை என்றால் இடுக்கி மாவட்டத்தைத் தமிழகத்திடம் கொடுங்கள்!' - சீமான்
இதற்கிடையே தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல, கேரள மாநிலத்தில் முல்லை பெரியாறு முதல் இடுக்கி அணை வரை உள்ள வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட கரையோரப் பகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாலார்பட்டி மக்கள்``முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில் முதல்வர் மெளன விரதத்தைக் கலைப்பாரா?" - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
அணையின் நீர்மட்டம் 142 அடி உயர்ந்ததை வரவேற்கும் விதமாக தேனி மாவட்ட விவசாய சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஆண்டுதோறும் முல்லை பெரியாறு அணை கட்டிய ஜான் பென்னி குவிக் பிறந்தநாள் விழாவின்போது பொங்கல் வைத்து பாலார்பட்டி மக்கள் கொண்டாடுவது வழக்கம். அவர்கள் இப்போது முல்லை பெரியாறு ஆற்றில் மலர்களைத் தூவி வரவேற்றனர்.
http://dlvr.it/Sg52LC
Thursday, 29 December 2022
Home »
» முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது; உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் இது 5வது முறை