பெங்களூரில், 16 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 73 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள ஹென்னுர் பகுதியில் வசித்து வந்தவர் குப்பண்ணா; வயது 73. இவர் அந்தப் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில், துணி காயப்போடச் சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை, தனது வீட்டுக்கு குப்பண்ணா அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. Harassment
இதனிடையே, வெகு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத சிறுமியைத் தேடிய குடும்பத்தினர், அருகில் இருந்த குப்பண்ணாவின் வீட்டில் நிர்வாணமாக இருந்த சிறுமியை கண்டுபிடித்து அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
குப்பண்ணா, அந்தச் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அவரிடம் அத்துமீறியிருக்கலாம் என்று சந்தேகித்த குடும்பத்தினர், முதியவரைத் தாக்கியுள்ளனர்.
மேலும், அடுத்த நாள் சிறுமியின் குடும்பத்தினர் காவல்நிலையத்துக்குச் சென்று, இச்சம்பவம் குறித்து புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் குப்பண்ணாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு படுத்திருந்த நிலையில் குப்பண்ணா இறந்து கிடந்துள்ளார்.சித்தரிப்பு படம்முடி உண்ணும் பழக்கம்: வயிற்றில் 3 கிலோ முடி... அறுவை சிகிச்சைக்குத் தள்ளப்பட்ட சிறுமி!
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் (கிழக்கு) பீமாசங்கர் எஸ் குலேட் கூறுகையில், `கொலை குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் உறவினர்கள் இருவர், அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார். முதியவர் குப்பண்ணாவின் அறையில் இருந்து மதுபாட்டில் கண்டெடுக்கப்பட்டதால், சிறுமி மது அருந்த கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுக்கிறது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://dlvr.it/SfP9mn
Thursday, 15 December 2022
Home »
» சிறுமியிடம் அத்துமீறல்; 73 வயது முதியவர் அடித்துக்கொலை!