மும்பை அருகில் உள்ள பால்கர் கடற்கரையோர கிராமமான மாகிமில் வசிக்கும் 16 வயது சிறுமி, அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அச்சிறுமி அவரின் காதலனுடன் கடற்கரைக்கு சென்றபோது அங்குள்ள பாழடைந்த பங்களாவில் காதலன் உட்பட 8 பேர் கொண்ட கும்பலால் இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 15 மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அப்பெண்ணை அவரின் காதலன் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கொண்டு வந்துவிட்டு சம்பவத்தை வெளியில் சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சொல்லி மிரட்டி அனுப்பி வைத்தார். ஏற்கனவே தங்களது மகளை இரவிலிருந்து காணவில்லை என்று அவரின் பெற்றோர் போலீஸில் புகார் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்துக்கொண்டிருந்தனர்.சம்பவம் நடந்த பங்களா
அப்போது, அச்சிறுமி தனது தந்தைக்கு போன் செய்து நடந்த விபரத்தை தெரிவித்தார். உடனே விரைந்து செயல்பட்டு அப்பெண்ணின் காதலனை போலீஸார் முதலில் கைது செய்தனர். அவரை கைது செய்து, அவரிடம் விசாரித்து எஞ்சிய 7 பேரையும் எளிதில் கைது செய்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``குற்றவாளிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அவரின் காதலனுடன் பைக்கில் கடற்கரைக்கு சென்று இருக்கிறார். அவரின் காதலன் அங்கிருந்து சற்று தொலைவில் வேறு இடக்கும் பங்களாவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே 7 பேர் மது அருந்திக்கொண்டு பார்ட்டி நடத்திக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து இரவிலிருந்து மறுநாள் காலை 11 மணி வரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அழைத்து சென்று தனியாக விட்டு வந்துவிட்டனர். அப்பெண் தனது தந்தைக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். உடனே அவரின் தந்தை இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு அப்பெண்ணின் மொபைல் சிக்னலை வைத்து அவரை கண்டுபிடித்தனர்” என்று தெரிவித்தார்.
http://dlvr.it/SfbSl0
Monday, 19 December 2022
Home »
» மும்பை: சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த காதலன் - 8 பேர் கைது