கேரளாவில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரீ சர்வே நடத்தப்பட்டு வருகிறது. தமிழக - கேரள எல்லை 822 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதில் 203 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக-கேரள எல்லையை அளவீடு செய்த பிறகே டிஜிட்டல் ரீ- சர்வே நடத்த வேண்டும் என எல்லையோர மற்றும் கேரள வாழ் தமிழர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் எல்லை வரையறை செய்யப்பட்டுவிட்டால் கண்ணகி கோயில் தொடர்பான பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிடும்.எல்லைமுல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக மீண்டும் ஆவணப்படம்? கொதிப்பில் விவசாயிகள்!
ஆனால் டிஜிட்டல் ரீ சர்வே என்ற பெயரில் தமிழர்களை அகதிகளாக மாற்றும் திட்டத்தை கேரள அரசு கையில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே கேரள அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுவரும் தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய தாலுகாக்களையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.
ஏற்கெனவே கேரளஅரசு மற்றும் வனத்துறையால் ஒவ்வொரு சித்ரா பெளர்ணமி அன்றும் கண்ணகி கோட்டத்துக்கு தமிழக பக்தர்கள் சென்றுவர பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர் வழியாக பாதை அமைத்து கொடுக்க வேண்டும். கண்ணகி கோட்டத்தை தமிழக அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. கண்ணகி கோயில்`முல்லைப் பெரியாறு அணை; நீர் மட்டத்தை 130 அடியாகக் குறைக்க மனு!’ - விவசாயிகள் அதிர்ச்சி
இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டுவருவதற்கான வேலையைத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கண்ணகி கோயில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கு ஆட்சேபனை இருப்பின் தேனி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் தெரிவிக்கும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணகி கோட்டத்துக்கு தமிழக வனத்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கண்ணகி கோயிலில் வழிபடும் பக்தர்களும், தமிழ் ஆர்வலர்களும் வரவேற்பு அளித்துள்ளனர்.
கண்ணகி கோட்டத்தை தமிழக அரசு கட்டுபாட்டில் கொண்டுவருதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு கேரள தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறுநீரதிகாரம் - 16 - முல்லைப் பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ''கடந்த 40 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட வேண்டும் உடைத்து விட வேண்டும் என கேரள அரசு செயல்பட்டு வருகிறது. காய்கறி உள்பட எல்லாவற்றிற்கும் தமிழகத்தைச் சார்ந்திருக்கிறோமே என்கிற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் 1979 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை முல்லைப் பெரியாறு அணையை குறி வைத்து கொண்டிருக்கின்றனர்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்பது கேரளாவினுடைய தற்போதைய முழக்கமல்ல, அது இடுக்கி அணை கட்டி முடிக்கப்பட்ட 1970 காலகட்டத்தில் தொடங்குகிறது. முல்லைப் பெரியாறு அணையை விட ஏழு மடங்கு பெரிதாக கட்டப்பட்டிருக்கும் இடுக்கி அணையிலிருந்து நாளொன்றிற்கு 784 மெகாவாட் மின்சாரம் எடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே முல்லைப் பெரியாற்றை குறி வைக்கிறார்கள். இதற்கு முன் சாத்தியக்கூறு அறிக்கை, விரிவான திட்ட அறிக்கை, திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டு தயாரித்தல் அறிக்கை என ஒரு அணைக்கு தேவையான அத்தனை திட்ட அறிக்கைகளையும், கேரளா 15 ஆண்டுகளுக்கு முன்பே தயார் நிலையில் வைத்திருக்கிறது. அன்வர் பாலசிங்கம்முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை!− ஆய்வுப் பணியைத் தொடங்கியது கேரள அரசு
முல்லைப்பெரியாறு அணை இருக்கும் இடத்திலிருந்து 366 மீட்டருக்கு கீழே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளார்கள். இதை சாக்காக வைத்து வண்டிப்பெரியாறு நகரத்தை சுற்றி இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தமிழ் தொழிலாளிகளை வெளியேற்ற உள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்றும், எந்த வகையிலும் புதிய அணை தேவையில்லை. புதிய அணை திட்டத்தை கேரளா தமிழகத்தின் மீது திணிக்க முடியாது. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணையை கட்ட முடியாது. பன்மாநில நதிகள் பட்டியலில் முல்லைப் பெரியாறு வருவதால் தமிழகம் புதிய அணை குறித்தான விடயத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் எந்த தைரியத்தில் புதிய அணைக்கான திட்டப் பணிகளை கேரளா தீவிரப் படுத்துகிறது எனத் தெரியவில்லை. லோயர்கேம்ப் முல்லைப்பெரியாறு தமிழகம் வந்தடைந்த முல்லைப் பெரியாறு நீர்; 14,000 ஏக்கர் விவசாய நிலத்துக்கு பாசன வசதி!
டிஜிட்டல் ரீ சர்வே மூலம் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் கேரளாவின் நோக்கத்திற்கு, தமிழகத்தில் கிளம்பும் எதிர்ப்பை மடை மாற்றுவதற்கு கூட கேரளா புதிய அணை என்கிற அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது. மேலும் மங்கலதேவி கண்ணகி கோயிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.முல்லைப்பெரியாறு
புதிய அணையை கட்டுவதற்கு கேரளா தயாரானால் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள். அப்போது தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை 3 தாலுகாக்களையும் தமிழகத்தோடு இணைக்கக் கோருவோம்'' என்றார்.
http://dlvr.it/SfL5JQ
Wednesday, 14 December 2022
Home »
» முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை...
எதிர்க்கும் தமிழக விவசாயிகள்!