கடலூரில் ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை முன்கூட்டியே பார்த்த பெண் ஒருவர் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று ரயிலை நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார். அப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சு. இவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அதில் விரிசல் இருந்ததை பார்த்துள்ளார். உடனடியாக இது சம்பந்தமாக ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று சேந்தனூர் ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் முன்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. நேற்று (05.12.2022) காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தகவலையடுத்து உடனடியாக அங்குசென்ற ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்து, பின்னர் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு ரயில் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து ரயில்வே போலீசார் அக்கடவள்ளி கிராமத்தில் வசிக்கும் மஞ்சுவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
http://dlvr.it/SdvwfD
Tuesday, 6 December 2022
Home »
» ரயில் தண்டவாளத்தில் விரிசல் - முன்கூட்டியே எச்சரித்த பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்