கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரிலுள்ள சமராஜ்பேட்டை பகுதியில், பாஜக சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இதில், பாஜக எம்.பி-க்கள் தேஜஸ்வி சூர்யா, பி.சி.மோகன் மற்றும் எம்.எல்.ஏ உதய் கருடாச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேடையில், எம்.பி-க்கள் நிகழ்ச்சியை தொடங்கிவைக்கும்போது அவர்களுடன், பெங்களூரு போலீஸாரால் கடந்த 23-ம் தேதி முதல் தேடப்பட்டுவரும் ரெளடி, ‘சைலன்ட் சுனில்’ என்ற சுனில் உடனிருந்தார். பாஜக எம்.பி-க்களுடன் சுனில் நிற்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகின. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினரிடையே வார்த்தைப்போர் வெடித்து, கர்நாடக அரசியல் அனலாகக் கொதிக்கிறது. ரெளடி சுனில்
பல ஆண்டுகளாக, 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரெளடி சுனில், பாஜக–வினருடன் மேடையில் இருந்தது தொடர்பாக, கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துவருகின்றனர்.
‘ரெளடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள்?’
காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா நிருபர்களிடம், ``கொலை மற்றும் மோசடி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுனில். கடந்த சில நாள்களாக உளவுத்துறையால் தேடப்பட்டுவருகிறார். இப்படியான ரெளடியுடன் இணைந்து பாஜக தலைவர்கள் விழாவை நடத்தியுள்ளனர். ரெளடிகளுக்குத் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்துவருகிறது பாஜக.காங்கிரஸ் - சித்தராமையா
கர்நாடக பாஜக எம்.பி-க்களும், தலைவர்களும் உடனிருக்கும்போது, சுனிலைக் கைதுசெய்ய போலீஸாருக்கு எப்படி தைரியம் வரும்... பாஜக எப்போதும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகச் செயல்படுகிறது. இன்னும் எத்தனை ரெளடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்போகிறதோ?’’ எனக் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விஷயம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பாஜக எம்.பி பி.சி.மோகன் நிருபர்களிடம், ‘``சுனில் யார் என்றே எனக்குத் தெரியாது, அவரது பின்புலமும் எனக்குத் தெரியாது’’ என பேட்டியளித்திருக்கிறார்.எம்.பி-க்களுடன் சுனில்.
இதேபோல, பாஜக எம்.எல்.ஏ கருடாச்சர், ‘‘நான் நிகழ்ச்சிக்குச் சென்றபோது அங்கு யாரும் இல்லை. நிகழ்ச்சி தொடங்கியதும் அனைவரும் கூட்டமாக வந்தனர். என்னை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். அதனால் சென்றேன். சுனில் என்ற பெயரை மட்டுமே தெரியும் அவர்தான் ‘சைலன்ட் சுனில்’ என்பது தெரியாது,’’ என விளக்கமளித்திருக்கிறார். எம்.பி பி.சி.மோகன் மற்றும் எம்.எல்.ஏ கருடாச்சரின் விளக்கங்களை காங்கிரஸ் கட்சியினர் கலாய்த்துவருவதுடன், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம், ‘‘பாஜக–வினர் சொல்லும் விளக்கங்களைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. ‘லைலன்ட்’ சுனில்தான் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர். சுனில் அழைப்பு விடுத்ததால்தான், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். போலீஸார் சுனிலைக் கைதுசெய்வதற்காகத்தான் வந்தனர். ஆனால், எம்.பி-க்களை கண்டதும் கைது செய்யாமல் போலீஸார் அமைதியாகிவிட்டனர்’’ என தனது விளக்கத்தைப் பதிவுசெய்தார்.முதல்வர் பசவராஜ் பொம்மை
‘காங்கிரஸ் முதலில் ரெளடிகளை எண்ணட்டும்!’
விஷயம் பெரும் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், இன்று (29-ம் தேதி) நிருபர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘‘காங்கிரஸ் கட்சியில் எத்தனை ரெளடிகள் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பாஜக–வை சுட்டிக்காட்டும் முன்பு, முதலில் காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் கட்சியிலுள்ள ரெளடிகளை எண்ணிப்பார்க்கட்டும்’’ என காட்டமாக விளக்கமளித்தார்.
‘வாக்காளர்களின் தகவல் திருட்டுச் சம்பவம், தற்போது ரெளடியுடன் நிகழ்ச்சி எனப் பல்வேறு விவகாரங்கள் அங்கு அரசியலில் அனலைக் கிளப்பிவருகின்றன. கெம்பே கௌடாவுக்கு பிரமாண்ட சிலை... கர்நாடகா பா.ஜ.க-வின்
‘வோட் பேங்க் டார்கெட்!’
http://dlvr.it/Sdfgxg
Thursday, 1 December 2022
Home »
» கர்நாடகா: ரெளடியுடன் மேடையில் பாஜக எம்.பி-க்கள்... காங்கிரஸ் Vs பாஜக வார்த்தைப்போர்!