கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகள் பலவும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து, வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றனர்.ரமேஷ் ஜார்கிஹோலி
அந்த வரிசையில் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் ஜார்கிஹோலி, வாக்காளர்களிடம் `பா.ஜ.க ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 தரும்' என்று நேற்று முன் தினம் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசினார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு, காங்கிரஸ் கர்நாடக தலைவர் டி.கே.சிவக்குமார், ``மாநிலத்தில் 40 சதவிகிதம் கமிஷன் என்ற மிகப்பெரிய ஊழல் இருக்கிறது" என விமர்சித்திருந்தார். அதோடு இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் மீது, டி.கே.சிவக்குமார், சித்தராமையா உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸைச் சாடியிருக்கிறார்.பசவராஜ் பொம்மை
காங்கிரஸின் புகார் தொடர்பாக இன்று பேசிய பசவராஜ் பொம்மை, ``ஒவ்வொரு பெண்ணுக்கும் 2,000 ரூபாய், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய வாக்குறுதிகளை அவர்கள் அறிவிக்கிறார்கள்.காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவக்குமார்
அப்படியென்றால், வாக்காளர்களைக் கவருவதற்காக அவர்கள் புதிய வாக்குறுதிகளை அளிக்கவில்லையா... அவர்கள் குற்றவாளிகள் இல்லையா... அவர்களுக்கு எதிராக இதுபோன்ற நூற்றுக்கணக்கான புகார்களை நாங்கள் பதிவுசெய்யலாம், ஆனால் மக்களுக்கு அவர்களை நன்றாகத் தெரியும், அவர்களே முடிவெடுப்பார்கள். காங்கிரஸ்காரர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை" என்றார்.`ஹிட்லர், முசோலினிபோலத்தான் மோடியும்!' - சித்தராமையா பேச்சு... பசவராஜ் பொம்மை பதிலடி
http://dlvr.it/ShSbwN
Thursday, 26 January 2023
Home »
» "200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு ரூ.2,000... காங்கிரஸ் குற்றவாளியில்லையா?!" - கர்நாடக முதல்வர்