சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து சில ஆண்டுகளாக கேரள அரசு விவாதித்துவருகிறது. இந்த நிலையில் சபரிமலை விமான நிலையத்துக்காக எருமேலி பகுதியில் 2,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை கேரள அரசு வெளியிட்டிருக்கிறது. செறுவள்ளி எஸ்டேட் நிலப்பகுதி போக, வெளியே 307 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவிருப்பதாக அந்த அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது. விமான நிலையத்துக்காக மணிமலா கிராமத்தில் அதிக நிலம் கையகப்படுத்தப்படவிருக்கிறது. அதே சமயம் செறுவள்ளி எஸ்டேட் தொடர்பான வழக்கு ஒன்று கோர்ட்டில் நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.சபரிமலை
சபரிமலை விமான நிலையத்துக்கான ஓடுதளம் 3,500 மீட்டர் நீளத்தில் அமையவிருக்கிறது. சபரிமலை விமான நிலைய திட்டத்துக்காக நாடாளுமன்றக்குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதே சமயம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது கேரள அரசு. கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் விமான நிலைய திட்டத்துக்காக இரண்டு கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கியிருந்தது.இது சபரிமலை சீசன் - ஐயப்ப படி பூஜை செய்வது எப்படித் தெரியுமா?! வாங்க தெரிஞ்சிக்கலாம்!
எருமேலியில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் அதிகரிக்கும் என கேரள அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் லூயிஸ் பர்ஜர் கம்பெனியிடம் விமான நிலைய கட்டுமான திட்டமிடல் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளன. சபரிமலை விமான நிலையத்துடன் திருவனந்தபுரம், கொச்சி விமானப் போக்குவரத்தை இணைக்கும் திட்டமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் சபரிமலையில் விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தில் தீவிரம்காட்டிவருகிறது கேரள அரசு.
http://dlvr.it/SgFZGF
Monday, 2 January 2023
Home »
» சபரிமலையில் விமான நிலையம்... கேரள அரசு தீவிரம் - 2,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஆணை!