உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா ரயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் திலா மைதானப் பகுதியிலுள்ள தரம்சாலாவில் அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில், திடீரென அந்தப் பகுதியில் ஆறு வீடுகளும், ஒரு கோயிலும் இடிந்து விழுந்திருக்கின்றன. இடிந்து விழுந்த வீடுகள்
இந்தச் சம்பவம் குறித்து இடிந்த வீட்டின் உரிமையாளர்களில் ஒருவரான முகேஷ் சர்மா, ``காலை 7:05 மணிக்கு விபத்து நடந்தது. இந்தப் பகுதி மிகவும் மேடானது. எங்கள் வீடுகளுக்கு அடுத்ததாக தரம்சாலா இருக்கிறது. அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்துவருகின்றன. அதற்காக நிலம் தோண்டப்பட்டதால், நிலச்சரிவு ஏற்பட்டு, அடுத்தடுத்து ஆறு வீடுகள், ஒரு கோயில் இடிந்து விழுந்தன.
அதில், எங்கள் வீடும் இடிந்து விழுந்தது. என் இரண்டு பேத்திகளும், மகனும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டனர். ஆனால், அதற்குள் என் பேத்தி இறந்துவிட்டாள். இந்தக் கட்டடப் பணியை நிறுத்தப் பலமுறை கூறியும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.இடிந்து விழுந்த வீடுகள்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுக்கும், மூத்த காவல்துறை அதிகாரிகளின் குழுக்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார். கட்டட இடிபாடுகளுக்குள் ஐந்து பேர் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில், 4 வயது குழந்தை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.இடிந்து விழுந்த 70 ஆண்டுகள் பழைமையான வீடு! -3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மூதாட்டி சடலமாக மீட்பு
http://dlvr.it/ShWSyh
Friday, 27 January 2023
Home »
» ஆக்ரா: திடீரென இடிந்து விழுந்த 6 வீடுகள்; 4 வயது குழந்தை பலி - அகழ்வாராய்ச்சிப் பணிகள் காரணமா?