கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில், புத்தாண்டு கொண்டாடுவோருக்கு விற்பனை செய்வதற்காக, போதை பொருள்கள் பதுக்கப்படுவதாக, மத்திய குற்றபுலனாய்வுத்துறை மற்றும் பெங்களூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று, கொத்தனுார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் போலீஸார் ஆய்வு செய்த போது, ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அந்த வீட்டில் போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
ஜேக்கப் வினோத், ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த ரமண சனாபதி, கத்ரி பகுதியை சேர்ந்த இர்பான் மற்றும் ஷேக் முகமது ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அந்த வீட்டிலிருந்து, 2.5 கிலோ MDMA, 350 போதை மாத்திரைகள், 4 கிலோ கஞ்சா ஆயில், 440 கிராம் சரஸ், ஏழு கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஹொம்மதேவனஹல்லி பகுதியில், அக்பு சிகே அந்தோனி என்ற நைஜீரிய நாட்டவரிடம், 250 கிராம் MDMA கைப்பற்றி அவரை கைது செய்தனர். போலீஸ்
கடந்த இரண்டு நாள்களில் மட்டும், எட்டு பேரை கைது செய்து, ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள்களை பறிமுதல் செய்திருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. மேலும், இன்று காலை முதல் பெங்களூரு முழுதிலும், டிரக் மாஃபியாக்களை கண்டறிய பல இடங்களில் போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். பெங்களூரில் தொடர்ந்து வெளிநாட்டு போதைப்பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.வீடு தேடி உணவு மட்டுமல்ல, கஞ்சாவும் வரும்... அதிர்ச்சி தரும் ‘ஹைடெக்’ போதை விற்பனை!
http://dlvr.it/SgCmp9
Sunday, 1 January 2023
Home »
» ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்... போலீஸார் தீவிர விசாரணை - பெங்களூருவில் அதிர்ச்சி!