இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைவராக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோகான் டிவி, வாஷிங்மெஷின் என்று எதை எடுத்தாலும் வீடியோகான் பெயர் ஒரு காலத்தில் மேலோங்கி இருந்தது. ஆனால், பின்னாளில் பெரும் சரிவை சந்தித்த வீடியோகான் தொழிலதிபர் வேணுகோபால் தூத் ரூ.31,000 கோடி கடன் மோசடியில் கைது செய்யப்பட்டார்.வேணுகோபால் தூத்அனில் அம்பானியைப் போல் மொபைல் சேவையால் வீழ்ச்சியை சந்தித்த வீடியோகான் வேணுகோபால் தூத்!
வீடியோகான் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு சந்தா கோச்சர் விதிமுறைகளை மீறி அதிகப்படியான கடன் கொடுத்தது தெரியவந்தது.
தன் கணவருக்கு NUPOWER நிறுவனத்தின் மொத்த உரிமையை வாங்கிக் கொடுப்பதற்காக வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் உடன் இணைந்து வங்கிக் கடன் மோசடியைச் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய பிரச்னை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், வீடியோகான் - ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடன் மோசடி குறித்து பல மாதங்களாக ஆய்வு செய்த சிபிஐ, அதன் பின்னர் சந்தா கோச்சர், அவரின் கணவர் தீபக் கோச்சர், வேணுகோபால் தூத் ஆகியோரை கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்தது.
திடீரென கைது செய்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. சந்தா கோச்சர் மகனுக்கு இம்மாதம் 15-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.தீபக் கோச்சர், வேணுகோபால் தூத், சந்தா கோச்சர்மல்லையா, நீரவ் மோடி சுப்ரதோ ராய்... செய்த குற்றம் என்ன? - ஓ.டி.டி சீரிஸ் சொல்லும் உண்மைகள்!
இம்மனு நீதிபதிகள் ரேவதி மற்றும் கே.சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கோச்சர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அமித் தேசாய், ``நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு இப்போது கைது செய்திருக்கிறார்கள். அதுவும் கிரிமினல் நடைமுறைச் சட்டம் 41ஏ பிரிவின் கீழ் விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைக்கவில்லை. அதோடு 46(4)வது சட்டப்படி கைது செய்யப்படும்போது பெண் அதிகாரி உடனிருக்கவில்லை. மனுதாரரின் மகனுக்கு இந்த வாரத்தில் திருமணம் இருக்கிறது. அத்திருமணத்தில் கலந்துகொள்ள இடைக்கால ஜாமீன் கொடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
ஏற்கெனவே பணமோசடி வழக்கில் தீபக் கோச்சரை அமலாக்கப் பிரிவு கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. அவருக்கு கோர்ட் ஜாமீன் கொடுத்திருக்கிறது. அதோடு சந்தாவைக் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சி.பி.ஐ தரப்பில் கோர்ட்டில் அறிக்கையும் இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் தன்னிச்சையாக சட்டவிரோதமாக இருவரும் கைது செய்யபட்டு இருப்பதாக கோச்சர் தரப்பில் வாதிடப்பட்டது.சந்தா கோச்சார் பல ஆயிரம் கோடி மோசடிக்கு பணி நீக்கம் மட்டும்தான் தண்டனையா? சந்தா கோச்சார் வழக்கு முழு விவரம்...
ஜாமீன் மனு மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்தா கோச்சரையும், அவரின் கணவர் தீபக் கோச்சரையும் உடனே விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
``இருவரும் சட்டப்படி கைது செய்யப்படவில்லை. இருவரும் தலா ஒரு லட்சம் ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கின்றனர்.
http://dlvr.it/Sgdz8q
Tuesday, 10 January 2023
Home »
» ``சட்டப்படி நடக்கவில்லை'': ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சரை விடுவிக்க கோர்ட் உத்தரவு!