மும்பை பாந்த்ரா ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் முகமது கான் என்பவர் தன்னுடைய மனைவி, குழந்தையோடு தங்கியிருந்தார். செப்டம்பர் 19-ம் தேதி முகமது கானுடன் நடைமேம்பாலத்தில் தங்கியிருந்த ஆசிக் அலி கான்(22) என்பவர் முகமது கானின் இரண்டு வயது பெண் குழந்தைக்கு சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி அழைத்துச்சென்றார். ஆனால், அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். மேலும், ஆசிக் அலி கான் யாசகம் செய்துவருவதாகத் தெரிகிறது.
இது குறித்து குழந்தையின் தாயார், ``நாங்கள் முதலில் வசாய் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். கடைகளில் பொம்மைகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்திவந்தோம். கொரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தங்க இடமில்லாமல் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் தங்கி இருந்தோம். குழந்தையுடன் பெற்றோர்
ஆசிக் அலி கான் எங்களுடன் நடைமேம்பாலத்தில் தங்கியிருந்தான். அடிக்கடி எங்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். குழந்தையோடும் அன்பாகப் பழகினான். இதனால் அவனை நம்பினோம். சம்பவத்தன்று எங்களின் மகளுக்கு சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி அழைத்துச் சென்றான். ஆனால், அதன் பிறகு அவன் திரும்பி வரவே இல்லை. இது குறித்து போலீஸாரிடம் தெரிவித்தபோது, நாங்கள் குழந்தையை விற்பனை செய்திருப்போம் என்று அலட்சியமாகத் தெரிவித்தனர்.
ஒரு வாரம் கழித்துதான் குழந்தை திருட்டு போனதை போலீஸார் நம்ப ஆரம்பித்தனர்'' என்று கவலையுடன் தெரிவித்தார். குழந்தை காணாமல் போனது குறித்து கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீஸார், குழந்தையைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.கைது
இது குறித்து பாந்த்ரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் , ``கடத்தப்பட்ட குழந்தை மற்றும் கடத்தியவர் தொடர்பாக 30,000 போஸ்டர்கள் அடித்து ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஆட்டோ நிறுத்தம், மார்க்கெட் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டினோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த போஸ்டர்களை ஒட்டினோம். ஆரம்பத்தில் குழந்தையை மும்பையில் மட்டும் தேடினோம். பிறகு டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பாட்னா, ஹவுரா போன்ற இடங்களிலும் தேடினோம்.
இதில் பூடான் எல்லையில் உள்ள கூச் பெஹார் என்ற இடத்தில் குற்றவாளி பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே விரைந்து சென்று குற்றவாளியைக் கைதுசெய்து, குழந்தையை மீட்டோம். குற்றவாளிக்கு விபத்து ஒன்றில் கால்கள் பறிபோய்விட்டன. அதோடு குடும்பமும் இல்லை. எனவே, எதிர்காலத்தில் தன்னை கவனித்துக்கொள்ளவும், யாசகம் செய்யவும் ஓர் ஆள் தேவை என்று கருதி குழந்தையைக் கடத்திச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. குழந்தையின் குடும்பமும் முதலில் இந்தக் குழந்தையை யாசகம் செய்யத்தான் பயன்படுத்தினர்.கைது
எனவே, குழந்தையை அவர்கள் பணத்துக்காக விற்பனை செய்திருப்பார்கள் என்று நினைத்தோம். அதன் பிறகு குழந்தை கடத்தப்பட்டதை உணர்ந்தோம். இப்போது குழந்தை மீட்கப்பட்டு அதன் பெற்றோரோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குழந்தையிடம் குற்றவாளி, கடந்த நான்கு மாதங்களில் தன்னை அதன் தந்தை என்று சொல்லியே வளர்த்திருக்கிறான்'' என்று தெரிவித்தார்.
மும்பை ரயில் நிலையங்கள், நடைபாதைகளில் ஏராளமானவர்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் அடிக்கடி திருட்டு போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மும்பை: வெளிநாட்டில் வேலை; விமான நிலையத்தில் விட்டுச்செல்லப்பட்ட 11 தமிழர்கள் - மோசடி ஏஜென்ட் கைது
http://dlvr.it/SghvVF
Wednesday, 11 January 2023
Home »
» ``இதற்காகத்தான் கடத்தினேன்..!" - குழந்தைக் கடத்தலில் கைதானவர் `பகீர்' வாக்குமூலம்