காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியால் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரை கிட்டத்தட்ட அதன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த யாத்திரையில் கடைசி மாநிலமாக வரும் வெள்ளிக்கிழமையன்று ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் நுழைகிறது. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தீபிகா புஷ்கர்நாத், கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார்.காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தீபிகா புஷ்கர் நாத்
இது குறித்து தீபிகா புஷ்கர் நாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``சவுத்ரி லால் சிங் பாரத் ஜோடோ யாத்ராவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதையடுத்து காங்கிரஸ் அதற்கு அனுமதியளித்திருக்கிறது. அதனால், கட்சியிலிருந்து நான் ராஜினாமா செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
2018-ம் ஆண்டில் கதுவா பாலியல் வன்கொடுமை வழக்கில் பாலியல் வன்கொடுமையாளர்களைப் பாதுகாத்து, வழக்கை சீரழித்ததற்குக் காரணமாக இருந்தவர் லால் சிங். பாலியல் வன்கொடுமையாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீரையும் லால் சிங் துண்டாக்கினார்.சவுத்ரி லால் சிங் - பாரத் ஜோடோ யாத்திரை
தத்துவார்த்த ரீதியாக பாரத் ஜோடோ யாத்திரை இதற்கு முற்றிலும் எதிர்மாறானது. எனவே, தத்துவார்த்த அடிப்படையில் அத்தகைய நபருடன் என்னால் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கதுவா பாலியல் வன்கொடுமை விவகாரமும், லால் சிங்கும்!
ஜம்மு - காஷ்மீரின் மனித உரிமை வழக்கறிஞரான தீபிகா புஷ்கர் நாத், 2018-ம் ஆண்டு கதுவாவில் 8 வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட வழக்கை கையிலெடுத்தார். ஆனால், அப்போதைய பா.ஜ.க-பிடிபி கூட்டணி ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்த லால் சிங், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.சவுத்ரி லால் சிங்
அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தின் பின்னணியில் லால் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. பின்னர் 2019-ல் பா.ஜ.க-விலிருந்து விலகிய லால் சிங், டோக்ரா ஸ்வாபிமான் சங்கதன் கட்சி (டி.எஸ்.எஸ்.பி) என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். இவர் ஏற்கெனவே 2014-ல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.காஷ்மீரை நெருங்கிய பாரத் ஜோடோ யாத்திரை... ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன?!
http://dlvr.it/Sh6Dj5
Thursday, 19 January 2023
Home »
» இறுதிகட்டத்தை நெருங்கும் பாரத் ஜோடோ; ஜம்மு-காஷ்மீர் முக்கிய நிர்வாகி திடீர் விலகல் - காரணம் என்ன?