கேரள மாநிலத்தில் ஹோட்டலில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹோட்டல்களில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நலக்குறைவுகள் பலருக்கும் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து ஹோட்டல்களில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாள்களில் நடந்த ஆய்வில் சுத்தம், சுகாதாரம் இல்லாத, லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட 112 ஹோட்டல்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. 578 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனை நடத்தி ஹெல்த் கார்டு எடுக்க வேண்டும் எனவும், வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்குள் அனைத்து ஹோட்டல்களிலும், ரெஸ்டாரன்ட்களிலும் ஹெல்த் கார்டு எடுக்காதவர்கள் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அதிரடியாக அறிவித்துள்ளார். அமைச்சர் வீணா ஜார்ஜ்
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிவிப்பில், "ஹோட்டல், உணவகங்களில் அனைத்து பணியாளர்களும் உடல் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவச் சான்றிதழ் எடுக்க வேண்டும். பிப்ரவரி 1-ம் தேதிக்குள் ஹெல்த் கார்டு எடுக்காத பணியாளர் ஹோட்டல், உணவகங்களில் வேலைசெய்யக்கூடாது. அப்படி வேலை செய்தால் அந்த ஹோட்டல் சீல் வைக்கப்படும். உணவு பாதுகாப்பு விதிமுறைப்படி மருத்துவச் சான்றிதழ் இருக்க வேண்டும். சான்றிதழ் எடுக்காமல் இருந்தாலோ, போலிச் சான்றிதழ் வைத்திருந்தாலோ ஹோட்டலுக்கு சீல் வைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத்துறையின் சுற்றறிக்கையில் சில வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளன:
* பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து ஹெல்த் கார்ட் பெற வேண்டும்.
* ரத்தப் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை நடத்தித்தான் மருத்துவர்கள் ஹெல்த் கார்டு வழங்க வேண்டும்.
* கிருமித்தொற்று, தொற்று நோய், தோல் நோய்கள், பார்வை குறைபாடு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
* நோய் எதிர்ப்புக்கான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளனவா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள்.பரிசோதனைகேரள மாணவியின் உயிரை பறித்த ஷவர்மா... கெட்டுப்போன சிக்கனில் தயாரித்ததால் விபரீதம்!
* ஹெல்த் கார்டுக்கான மாதிரி படிவம் உணவுப் பாதுகாப்பு கமிஷனர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ஹெல்த் கார்டுகள் அனைத்தும் ஹோட்டல்களில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் பரிசோதனை நடத்தும்போது அவற்றை காண்பிக்க வேண்டும்.
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மீண்டும் செய்து ஹெல்த் கார்டை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
http://dlvr.it/Sh9BLF
Friday, 20 January 2023
Home »
» ஹோட்டல் ஊழியர்களுக்கு மருத்துவச்சான்று கட்டாயம், தவறினால் சீல்: கேரள சுகாதாரத்துறை அதிரடி!