உத்தரப்பிரதேசத்தில், தன் தோழியை மணக்க விரும்பிய அரசு பெண் ஊழியர் ஒருவர், பாலின அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறினார். ஆனால், தோழியோ வேறோர் ஆண் நண்பரை மணந்து, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சோனல். இந்தப் பெண்ணின் வீட்டு மேல்தளத்தில் வாடகைக்கு குடியிருந்தவர், குஜராத்தைச் சேர்ந்த அரசு பெண் ஊழியரான சனா. 2016-ம் ஆண்டு வாடைகைக்கு குடியிருந்தபோது சோனல் மற்றும் சனா இருவரிடையே நட்பு உண்டாகி, நாளடைவில் நெருங்கிய தோழிகளாயினர். இருவருக்கும் இடையே பாலியல் ரீதியான உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்ட சோனலின் பெற்றோர், சனாவை வீட்டை விட்டு வெளியேற்றினர். சனா சோனல்
அரசு ஊழியரான சனாவுக்கு, 2017-ம் ஆண்டு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பு கிடைத்தது. அதில் வசித்து வந்த சனாவுடன் சேர்ந்து வாழ, அவரின் தோழியான சோனல் முடிவு செய்தார். வாழ்க்கையில் இருவரும் இணைபிரியாமல் வாழவேண்டுமென்று முடிவெடுத்தனர். எனவே, பாலின அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி, திருமணம் செய்து கொள்வது என்று சனா தீர்மானித்தார்.
அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு இருவரும் சென்றனர். அங்கு நடைபெற்ற பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனையில், சனாவுக்கு உடற்தகுதிச் சான்று கிடைத்தது. இதையடுத்து, 2020-ம் ஆண்டு ஜூனில் சனாவுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர், சனா தனது பெயரை அதிகாரபூர்வமாக சோஹைல்கான் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் கணவன்- மனைவியாக இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். அத்துடன் அரசு ஊழியராக சனா வேலைக்குப் போவதால், தானும் வேலைக்குச் செல்ல வேண்டுமென்று கருதிய சோனல், மருத்துவமனை ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார்.
நாள்கள் செல்லச்செல்ல, சோனாவின் போக்கில் மாற்றங்கள் உண்டாயின. சனாவை கண்டுகொள்ளாமல் சோனல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சனா கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே, மருத்துவமனையில் உள்ள கியான் என்பவரை சோனல் காதலித்து வந்தது தெரிய வந்தது. பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய சனாவுக்கு, சோனலின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இதனிடையே, சனாவை பிரிந்த சோனல், தன் காதலர் கியானுடன் சென்றார். மேலும், சனாவால் தனக்குப் பிரச்னை வரக்கூடாது என்று எண்ணி, காவல்துறையில் சோனல் புகார் அளித்தார். நீதிமன்றம்`காதலுக்காக..!' - மாணவியை மணக்க பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்த ஆசிரியை!
தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு, நீதிமன்றத்தை நாடியுள்ளார் சனா. இவ்வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் சோனல் ஆஜாராகவில்லை. இதையடுத்து ஜனவரி 18-ம் தேதி, சோனலை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடப்பட்டுள்ளார். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, வரும் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற உள்ளது.
http://dlvr.it/ShSbfQ
Thursday, 26 January 2023
Home »
» தோழியை மணக்க ஆணாக மாறிய அரசு பெண் ஊழியர்... வேறொருவரை கரம் பிடித்த தோழி; என்ன காரணம்?