கடந்த 2016-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான அசம் கான் இந்தச் சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் அத்தகைய கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்த நிலையில், "மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை கூறுவதற்கு விதிகள் ஏற்படுத்த வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை, அவதூறான கருத்துகளை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இது நாடாளுமன்றத்திலும் தொடர்கிறது. எனவே அவர்களுக்கு சில வரைமுறைகளையும், விதிகளையும் இயற்ற வேண்டும்" என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம் தொடர்பானது என்பதால், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது.அசம் கான்
இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் நால்வர், "பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் விதிகள் எதுவும் தேவையில்லை. அரசியல் சாசனத்தின் 19 (1), 19 (2) பிரிவுகளின் கீழ் கருத்து சுதந்திரத்துக்கு, எந்த அளவுக்கு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கிறதோ... அதுவே மக்கள் பிரதிநிதிகளுக்கும் (அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள்) பொருந்தும். அவர்களுக்கென கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. தற்போது பேச்சுரிமை தொடர்பாக நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளே போதுமானதாக இருப்பதாகக் கருதுகிறோம். அதேபோல அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் கருத்துகளை அரசாங்கத்தின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் கருத்துகளுக்கும் அவர்கள் விடும் அறிக்கைகளுக்கும் அவர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்" என்றனர்.
அதே சமயம் நீதிபதி நாகரத்னா, ``பேச்சுரிமை என்ற பெயரில் இழிவான, அவதூறான கருத்துகளை மக்கள் பிரதிநிகள் பயன்படுத்தினால் அரசாங்கம் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய செயலை அனுமதிக்க கூடாது" என்றார்.பில்கிஸ் பானு வழக்கு: 11 பேர் விடுதலையை எதிர்த்து தாக்கலான சீராய்வு மனு... உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
http://dlvr.it/SgLwMW
Wednesday, 4 January 2023
Home »
» ``மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது!" - உச்ச நீதிமன்றம்