கடந்த 10-ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். அதற்கு அடுத்தநாள் தாக்குதல் நடந்த அதே ரஜோரி மாவட்டத்தின் டாங்கிரி என்ற கிராமத்தில் ஐ.இ.டி குண்டு ஒன்று வெடித்ததில் ஒரு குழந்தை உயிரிழந்தது. ஐந்து பேர் காயமடைந்தனர்.
மேலும், காவல்துறை தரப்பு அந்தப் பகுதியில் மேலும் இரண்டு ஐ.இ.டி குண்டுகள் பூமியில் புதைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஒரு வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றிருக்கின்றனர். பாதுகாப்பில் ராணுவ வீரர்கள்
அப்போது அந்த வீட்டில் வளர்க்கப்பட்டுவரும் செல்லப்பிராணியான மைக்கெல் எனும் நாய், தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிந்து சத்தமாகக் குரைத்து அவர்களை எச்சரித்திருக்கிறது. இதனால் பதற்றமடைந்த தீவிரவாதிகள், வீட்டுக்குள் நுழைந்து, டிவியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக அந்தக் குடும்ப உறுப்பினர் நிர்மல் தேவி, "எங்கள் செல்லம் மைக்கெல் குரைக்க ஆரம்பித்தபோது நானும் என் பேத்தியும் சமையலறையில் இருந்தோம். மைக்கெல் எப்போதுமே ஆபத்தில்லாமல் குரைக்க மாட்டான் என்று என் பேத்தி சொன்னாள். இதனால் சந்தேகமடைந்த நாங்கள் எச்சரிக்கையுடன் இருந்தோம். அதனால் உயிர் தப்பினோம். தீவிரவாதிகள் வீட்டுக்குள் நுழைந்தபோது மைக்கெல் அக்கம்பக்கத்தினரையும் குரைத்து எச்சரித்தான். அவனின் எச்சரிக்கையால்தான் இந்தப் பகுதியில் பலர் உயிரோடு இருக்கின்றனர்" என்று தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அந்தப் பகுதியில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ரூ.1,20,000 மதிப்புள்ள மேக்புக்; ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான்!
http://dlvr.it/SgY6s0
Sunday, 8 January 2023
Home »
» ஜம்மு-காஷ்மீர்: ``எங்கள் நாயால்தான் உயிரோடு இருக்கிறோம்” - தீவிரவாதிகளிடமிருந்து தப்பிய குடும்பம்