மும்பை அருகிலுள்ள கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் லலித் உஜ்ஜைன்கர். இவர் திவாவைச் சேர்ந்த கிரண் சோனாவானே என்ற பெண்ணைக் காதலித்துவந்தார். ஆனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்திருந்தனர். இதனால் கிரண், கல்யாண் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா என்பவருடன் பழகிவந்திருக்கிறார். அதோடு இவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த லலித் அந்தப் பெண்ணிடம், ஆதித்யாவுடன் பழகுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் தன்னுடன் நட்பு வைத்துக்கொள்ளும்படி கேட்டார். ஆனால், கிரண் அதற்கு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. அதோடு இருவரும் காதலித்தபோது கிரண், லலித்திடம் ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்திருந்தார். அது தனக்கு திரும்ப வேண்டும் என்று கிரண் கேட்டார். அதோடு அதை வாங்க வீட்டுக்கு வருவதாக லலித்திடம் தெரிவித்திருந்தார். ஆதித்யாவின் தாயார்
இதனால் லலித் தன்னுடைய நண்பர்கள் மூன்று பேரை வீட்டுக்கு வரவழைத்திருந்தார். கிரண் தன் புதிய காதலன் ஆதித்யாவுடன் லலித் வீட்டுக்கு வந்தார். லலித் வீட்டில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. புதிய காதலனைக் கைவிடச்சொல்லி லலித் தகராறு செய்தார். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. லலித்தும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து ஆதித்யாவை அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ஆதித்யாவை குத்திக் கொலைசெய்துவிட்டு 4 பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கிரண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படை அமைத்திருக்கின்றனர். கொலையாளில் ஒருவன் மட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளான். முக்கியக் குற்றவாளி லலித் மத்தியப் பிரதேசத்துக்கு சென்றுவிட்டான் எனக் கூறப்படுகிறது. அவனைக் கைதுசெய்ய இரண்டு தனிப்படை போலீஸார் மத்தியப் பிரதேசம் விரைந்திருக்கின்றனர்.மும்பை: வெளிநாட்டில் வேலை; விமான நிலையத்தில் விட்டுச்செல்லப்பட்ட 11 தமிழர்கள் - மோசடி ஏஜென்ட் கைது
http://dlvr.it/Sgb8N6
Monday, 9 January 2023
Home »
» முன்னாள் காதலனிடம் கொடுத்த நாய்க்குட்டியை வாங்க புதுக்காதலனுடன் சென்ற பெண்; பிறகு நடந்த விபரீதம்