கடந்த வாரம் மத்திய பட்ஜெட் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, மோடியும், அதானியும் விமானத்தில் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, "இருவருக்கும் என்ன உறவு..? நான் மேற்கொண்ட `பாரத் ஜோடோ' யாத்திரையில் மக்கள் அனைவரும் ஒரு பெயரை மட்டும் என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டனர். அவர்தான் அதானி.ராகுல் காந்தி
எப்படி அவரால் மட்டும் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றிபெற முடிகிறது. காஷ்மீரில் ஆப்பிள் ஏற்றுமதி தொடங்கி கேரளாவில் விமானம், துறைமுகம் என அனைத்திலும் அதானி வெற்றி சாத்தியமானது எப்படி?" என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட தகவல்களுக்கு தகுந்த ஆதாரத்தை ராகுல் காந்தி வழங்கக்கோரி பா.ஜ.க எம்.பி-க்கள் நிஷிகாந்த் துபே, பிரஹலாத் ஜோஷி ஆகியோர் சிறப்புரிமை மீறல் நோட்டீஸைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி நிஷிகாந்த் துபே, "பிரதமர் பற்றி கேட்கப்போகும் கேள்விகள் குறித்து சபாநாயகருக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல், எங்கள் பிரதமருக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை யாரும் எழுப்ப முடியாது.பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே
அதனால் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். அந்த நோட்டீஸில், ராகுல் காந்தியின் கூற்றுகளுக்கு ஆதரவான ஆதாரங்களை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறினால் அவர் மக்களவையிலிருந்து பதவியை இழக்க நேரிடும்" எனத் தெரிவித்திருக்கிறார்.``பாஜக-வுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் அதானி?" - நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய ராகுல் காந்தி
http://dlvr.it/SjNdL1
Tuesday, 14 February 2023
Home »
» ``நாடாளுமன்றத்தில் ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லையெனில்..!" - எச்சரிக்கும் பாஜக எம்.பி