நீட் தேர்வு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றதாகச் செய்திகள் வெளியாயின. நீட் மனுவைத் திரும்பப் பெற்றதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. அதற்குரிய விளக்கத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். அதில், ``அ.தி.மு.க ஆட்சியில் அவசரக் கோலத்தில் காலாவதியான சட்டத்தைக் குறிப்பிட்டு நீட் ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவைத் திரும்பப் பெற்று புதிய மனு தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தி.மு.க அரசு நீட் ரத்து மனுவைத் திரும்பப் பெற்றதாக வீண் பிரசாரத்தைப் பரப்ப வேண்டாம்” எனக் கூறியிருந்தார்.அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஏன் திரும்பப்பெறப்பட்டது?
இந்திய மருத்துவக் குழுமச் சட்டம் (1956) மற்றும் பல் மருத்துவச் சட்டத்தில் (1948) கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தத்தால், 2016-17-ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் அதில் இந்திய மருத்துவக் குழுமச் சட்டம் (1956) மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது. அது மருத்துவப் படிப்புகளை ஒழுங்கமைக்க, தேசிய மருத்துவ ஆணைய சட்டம் (2019) என்ற புதிய சட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. தற்பொழுது நீட் தேர்வு மற்றும் மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கை இந்தப் பிரிவின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னாள் அ.தி.மு.க அரசு, மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட சட்ட விதியான இந்திய மருத்துவக் குழுமச் சட்டத்தைக் (1956) குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நீட் தேர்வு ``அதிமுக ஆதரித்திருந்தால் இன்று நீட் தேர்வு ரத்தாகியிருக்கும்!" - திருச்சி சிவா சாடல்
எனவே, அ.தி.மு.க அரசால் தவறான மற்றும் நீர்த்துப்போன சட்டப் பிரிவுகளின்படி தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நடத்தினால், அது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்கும், மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என தி.மு.க சார்பாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது. எனவே, இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, பழைய மனு திரும்பப் பெறப்பட்டு புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக பழைய மனு திருப்பப் பெறப்பட்டதற்கு எதிராகவே விமர்சனம் எழுந்தது.மருத்துவம்
புதிய மனுத்தாக்கல்!
``மத்திய அரசு அமல்படுத்திய, `தேசிய மருத்துவ ஆணைய சட்டம்' (2019) –ன் பிரிவு 14, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணைய சட்டம் (2020) மற்றும் தேசிய ஹோமியோபதி சட்டம் (2020) தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி விதிமுறைகளுக்கு எதிராகவும், மாநில கூட்டாட்சிக் கொள்கைகளை மீறுவதாலும், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிராக இருக்கிறது. இந்த அடிப்படையில் புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. ஏற்கெனவே தவறான சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்கை தி.மு.க அரசு திரும்பப் பெற்றிருக்கிறது.நீட் தேர்வு
மத்திய அரசின் பாதகமான சட்டவிதிகளை எதிர்த்து தொடர்ந்திருக்கும் இந்த வழக்கு நிச்சயம் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மாநில உரிமைகளை மீட்டெடுக்கும்” என தி.மு.க-வினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர்.ரவீந்திரநாத், ``சட்டப்படி தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்திருக்கும் புதிய மனு நியாயமான கோரிக்கையை கூர்மையான சட்ட விதிகளின் அடிப்படையில்தான் தொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. சில நீதிபதிகள் சந்தர்பத்துக்கு ஏற்ற மாதிரியும் அரசியல் காரணங்களுக்காகவும் தீர்ப்பில் வேறுபடுகின்றனர்.உச்சநீதிமன்றம்
அதேபோல், நீட் தேர்வுக்கு ஆதரவாகவே உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இருந்துவருகிறது. இன்னும் சொல்லப்போனால், மருத்துவ நுழைவுத் தேர்வைக் கொண்டுவர தொடக்கப்புள்ளியாக இருந்ததே உச்ச நீதிமன்றம்தான். மாநிலத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி இருக்க வேண்டுமென மாநில அரசு திட்டமிடுகிறது. ஆனால், அதை மதிக்காமல் மத்திய அரசு நீட்டைத் திணிக்க முயல்கிறது. இப்படி கூட்டாட்சிக்கு எதிராக நடப்பது சட்டத்துக்கு எதிரானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்.மருத்துவர் ரவீந்திரநாத்
ஒருவேளை, `நீதிமன்றம் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பை வழக்கினாலும் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளுமா?’ என்னும் கேள்வி எழுகிறது. அப்படி தமிழக அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், அப்போது சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்து தீர்ப்பை நீர்த்துப்போகும் நடவடிக்கையை மத்திய அரசு செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது உடனடியாகத் தீர்வு கிடைக்குமா... என்பதை நம்மால் கணிக்க முடியாது. எனவே, தொடர் போராட்டங்களை அரசு நடத்த வேண்டியிருக்கும்” என்றார்.நீட் தேர்வு... கோட்டைவிட்ட பள்ளிக்கல்வித்துறை... தொடரும் மெத்தனத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?
http://dlvr.it/Sk1Pvj
Sunday, 26 February 2023
Home »
» நீட் தேர்வுக்கு எதிரான உச்ச நீதிமன்ற மனுவைத் திரும்பப் பெற்றதா திமுக அரசு?-நீட் விலக்கின் நிலை என்ன?