மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தொடக்கத்திலேயே, ”இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது” என்று அழுத்தமாக தனது கருத்தினை அவர் பதிவு செய்தார்.
பின்னர் பேசிய முதல்வர், ”அடுத்து ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது பெண்களை வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து வறுமையை ஒழித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும். மகளிர் சமூக பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய மாதம் ஆயிரம் ரூபாய் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்” என்றார்.
”நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள் வணிகம் மற்றும் சிறு நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியக்கூடிய மகளிர் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பே தொடர்ந்து வழங்கிவரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்..” என்று முதல்வர் கூறினார்.
அத்துடன், இந்த திட்டத்திற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் விரிவாகத்தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க.
http://dlvr.it/SlbKFh
Tuesday, 28 March 2023
Home »
» யாருக்கெல்லாம் உரிமைத் தொகை ரூ1000 கிடைக்கும்? - பேரவையில் முதல்வர் கொடுத்த விளக்கம்