அட்லீ - ஷாருக்கானின் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன் காட்சி என்று சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி வரும் நிலையில், பாலிவுட்டின் எல்லா சாதனைகளையும் இந்தப் படம் முறியடிக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, 5-வது படமாக ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே, வில்லனாக விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மும்பை, ஹைதரபாத், சென்னை உள்பட பல இடங்களில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் வரும் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகான் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டெர்டெயிண்மெண்ட் தயாரிக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் ஷாருக்கான் அதிரடியாக சண்டையிடும் காட்சிகள் என்று சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. நீல நிற உடையில் தோற்றமளிக்கும் ஷாருக்கான் வெள்ளை நிற பெல்ட்டால் எதிரிகளை துவம்சம் செய்வதுபோல் அந்த வீடியோவில் உள்ளது. இதனைப் பார்த்து வரும் அவரது ரசிகர்கள் அதிகளவில் இந்த வீடியோவை ஷேர் செய்வதுடன், பாலிவுட்டில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்றும், நிச்சயமாக படம் 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்றும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
#Pathaan was just a teaser... Asli mass action picture toh #Jawan hogi... SRK in an avatar like never before!
— Rahul Raut (@Rahulrautwrites) March 10, 2023
What the hell is this man .@Atlee_dir is going to blast the screen on June 2nd.@iamsrk swag and @anirudhofficial BGM #LeoFilm #Jawan @actorvijay pic.twitter.com/mwSYVjGLyy
— Aash (@thenameisaash) March 10, 2023
அத்துடன், ‘பதான்’ படத்தை அடுத்து ஷாருக்கானின் ரசிகர்கள் ‘ஜவான்’ படத்தை விளம்படுத்துவதற்காக fake ஆன வீடியோவை எடிட் செய்து இவ்வாறு பதிவிட்டு வருவதாகவும், சிலர் லெஜண்ட் சரவணின் ‘தி லெஜண்ட்’ படத்தில் வரும் அதே அதிரடி காட்சி என்று இரண்டையும் ஒப்பிட்டு காப்பி அடித்துவிட்டதாக கூறிவருகின்றனர். இதனால் ‘ஜவான்’ மற்றும் அட்லீயை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வரும் அதேவேளையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் காப்புரிமையின் கீழ், ‘ஜவான்’ படத்திலிருந்து லீக்கான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் நீக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Every Masterpiece has its own cheap copy. 1 : The Legend tamil movie fight scene. 2 : #Jawan Leaked fight scene. pic.twitter.com/ExliPQGAgB
— (@Sallubot) March 10, 2023
http://dlvr.it/SkjlKk
Saturday, 11 March 2023
Home »
» ‘ஜவான்’ படத்திலிருந்து லீக்கானதாக வைரலாகும் அதிரடி ஆக்ஷன் காட்சி - கொண்டாடும் ரசிகர்கள்!