நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். நகரின் முக்கியப் பிரச்னைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.
மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பான விவாதங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. முக்கியப் பிரச்னைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.ஊட்டி நகராட்சி கூட்டம்
இந்த நிலையில், கூட்டத்தின்போது எழுந்து பேசிய அ.தி.மு.க கவுன்சிலர்கள் சிலர், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதிருப்தியில் குறுக்கிட்டுத் தடுத்த தி.மு.க கவுன்சிலர்கள் முதல்வர் ஸ்டாலின் புகழை உரக்கப் பேசி கவனத்தைத் திசைதிருப்பினர்.
மேலும் அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் அமளியில் ஈடுபட்டு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க விடாமல் தடுத்தனர். இந்த நிகழ்வால் நகர்மன்றக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாகத் தலையிட்ட ஊட்டி நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துவைத்தனர்.கோவை: கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கார் - சைக்கிள் ஓட்டி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!
http://dlvr.it/SlmK9v
Friday, 31 March 2023
Home »
» இபிஎஸ்-ஸை வாழ்த்த முயன்ற அதிமுக-வினர்: அமளி செய்த திமுக-வினர்; நீலகிரி நகர்மன்ற கூட்டத்தில் சலசலப்பு