மகளிர் இலவச பயணத் திட்டத்தின் மூலம், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதை அமைச்சர் பொன்முடி 'ஓசி' எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு, பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை பொது மேடையிலேயே சாதியின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டதும், கிராமசபைக் கூட்டம் ஒன்றில் பெண் ஒருவரை ஒருமையில் பேசியதும், பொதுமக்களுடனான பேச்சுவார்த்தையின்போது தடித்த வார்த்தைகளால் அவர் பேசியது என இவை யாவும் அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்றைய தினம் அரசு விழா ஒன்றில் மக்கள் தங்கள் பிரச்னை குறித்து அவரிடம் முறையிட்டபோது, அவர் பேசிய வார்த்தை பொதுமக்களை மீண்டும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.பொன்முடிவிழுப்புரம்: போராடிய கிராம மக்களிடம் தடித்த வார்த்தை... மீண்டும் சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம் மாவட்டம், அருங்குறுக்கை பகுதியில் நேற்றைய தினம் ஆற்றுப்பாலம் மற்றும் அரசுப் பள்ளியின் புதிய சுற்றுச்சுவர் திறப்புவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி... பின்னர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாடினார். அப்போது பேசியவர், "இரண்டு மொழி படித்தால் போதாது. 3-வதாக ஒரு மொழி படிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மொழி என்ன... படிக்கிறீர்களா... இந்த இரண்டு மொழி படிப்பதற்கே நம்ம உயிர் போகிறது. சிலரோ இந்தி படித்தால் வேலைக்குப் போகலாம் என்கிறார்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை.
ஆங்கிலம் என்பது சர்வதேச மொழி. எனவேதான், தமிழையும் ஆங்கிலத்தையும் படித்தால் போதும் என்றார் பேரறிஞர் அண்ணா. இந்தியாவைப் பொறுத்தவரை ஏழு மாநிலங்களில்தான் அந்த மொழி இருக்கிறது. மீதி இடங்களில் அவரவர் தாய்மொழியையே பேசுகிறார்கள். இப்படிப் பல மொழிகள் இருக்கின்றன. எல்லாவற்றையுமா நாம் கற்றுக்கொள்ள முடியும்... தேவைப்பட்டால், அந்தப் பகுதிகளுக்கு வேலைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளப்போகிறீர்கள். `படிக்கும்போது, தமிழ்மொழியுடன் சர்வதேச மொழியான ஆங்கிலத்தையும் படிக்க வேண்டும். இந்த இரண்டு மொழிகள் தெரிந்தாலே போதும்’ எனச் சொன்னவர்தான் பேரறிஞர் அண்ணா. அவர் முதலமைச்சராகப் பதவியேற்ற நாள்தான் இந்த நாள். மாணவர்களுக்குப் பரிசு வழங்கிய பொன்முடி
எனவே, மாணவ, மாணவியர்களே நன்றாகப் படியுங்கள். பெண் கல்வி மேம்பாட்டுக்காக, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிற உலகத்திலேயே ஒரே முதலமைச்சர் தளபதி ஸ்டாலின்தான். அருங்குறுக்கை, கொணரவாடி மாணவர்கள் இங்கேதானே படிக்கிறீர்கள்..." என்றார். அதற்குப் பள்ளி மாணவர்களோ, 'எஸ் சார்' என பதிலளித்தனர். அதை உள்வாங்கிக்கொண்டு தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, "பாருங்கள்... எல்லாம் 'எஸ் சார்.’ `ஆமாம் எனச் சொல்ல மாட்டீர்களோ... எல்லாம் ஆங்கிலத்திலேயே போய்விட்டது காலம். தவறு இல்லை, ஆங்கிலம் நன்றாகத் தெரிய வேண்டும். நாங்கள் படிக்கும்போது, ஆங்கிலம் சரியாகத் தெரியாததால்தான் இந்த வம்பெல்லாம். நீங்கள் அதையெல்லாம் படிக்கிறீர்கள் வாழ்த்துகள்" என்றார்.
அப்போது, அந்தப் பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை குறித்து பொன்முடியிடம் கேள்வி எழுப்பினர். "எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழி கிழினு கிழிச்சிட்டீங்க. நீங்க வந்து கேக்குறீங்க. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. பொன்முடி பேச்சு
ஓட்டுப்போட்டவர்கள், போடாதவர்களுக்கும் நல்லதைச் செய்யச் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். ரோடு போட்டது நான், பஸ்விட்டது நான், குடிதண்ணீர்விட்டது நான்..! குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்?" என்றார் காட்டமாக. வாக்களித்த மக்களைப் பார்த்து அமைச்சர் பொன்முடி இவ்வாறாகப் பேசியிருப்பது மீண்டுமொரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.விழுப்புரம்: இளைஞர் மர்ம மரணம்?; சாலைமறியலில் ஈடுபட முயன்ற உறவினர்கள் - விசாரணையில் போலீஸ்!
http://dlvr.it/SkTnWZ
Tuesday, 7 March 2023
Home »
» "எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழிச்சிட்டீங்க" - அமைச்சர் பொன்முடி பாய்ச்சல்