ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகரில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டம்
அதன்படி விருதுநகர் ரயில்வே பீடர் சாலையிலுள்ள வி.வி.ஆர் சிலை முன்பாக இன்று காலை விருதுநகர் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், தொண்டர்கள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அணியாகத் திரண்டனர்.
அதைத் தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் அவர்கள் பேரணியாக ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர். அப்போது ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்குக் கண்டனம் தெரிவித்தும், மத்திய மோடி அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். ரயில் நிலையம் அருகே வந்தபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பேரணியாக வந்தவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.கைது
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரயில் மறியல் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, தடையை மீறி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைதுசெய்தனர். பெண்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.நெல்லை: கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்து; ஆசிரியை பலியான சோகம்! - பொதுமக்கள் சாலை மறியல்
http://dlvr.it/SmYhgr
Sunday, 16 April 2023
Home »
» விருதுநகரில் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி; எம்.பி உட்பட 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது