பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று (ஏப்.24) கேரள மாநிலம் வருகிறார். வந்தே பாரத் ரயில், மெட்ரோ ரயில் திட்டங்களைத் தொடங்கிவைப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என இரண்டு நாள்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. சீரோ மலபார் சபை ஆர்ச் பிஷப் கர்த்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மலங்கரை கத்தோலிக்க சபை கர்த்தினால் பசேலியோஸ் மார் கிலிமீஸ், ஆர்த்தோடெக்ஸ் சபையின் கர்த்தினால் மார்த்தோமா மேத்யூஸ் உள்ளிட்ட எட்டு சபைகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாடுகிறார். கொச்சி தாஜ் விவண்டா ஹோட்டலில் வைத்து பிஷப்புகள் சந்திப்பு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் ஜார்ஜ் ஆலஞ்சேரி, பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் புகழ்ந்து பேசியவராவார். பின்னர் இன்று மாலை கொச்சியில் நடக்கும் பா.ஜ.க பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். நாளை திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைக்கிறார்.கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்
பிரதமர் வருகையை முன்னிட்டு திருவனந்தபுரம் ரயில் நிலையம் மட்டுமல்லாது, ரயில்வே ஸ்டேஷனையொட்டி அமைந்திருக்கும் பஸ் ஸ்டாண்டிலும் போக்குவரத்து மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்புகளும், அவருக்கான ஏற்பாடுகளும் குறித்த போலீஸ் அதிகாரிகளின் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியானது சர்ச்சையைக் கிளப்பியது. அதுமட்டுமல்லாது பிரதமர் நரேந்திர மோடிக்குக் கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
கேரளத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலைசெய்யப்போவதாக ஒரு பேப்பரில் கையெழுத்தால் எழுதிய மிரட்டல் கடிதம் பா.ஜ.க அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. அது குறித்து மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் டி.ஜி.பி-யிடம் புகாரளித்தார். அந்தக் கடிதத்தில் ஜானி என்பவரின் பெயர், செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தனக்கும் அந்தக் கடிதத்துக்கும் சம்பந்தம் இல்லை என ஜானி தெரிவித்திருந்தார். கைதுசெய்யப்பட்ட சேவியர்
அதே சமயம் ஜானியைப் பழிவாங்கும் நோக்கத்தில் கொச்சி கத்ருகடவு பகுதியைச் சேர்ந்த சேவியர் என்பவர் அந்தக் கடிதத்தை அனுப்பியது தெரியவந்தது. நண்பர்களான இருவருக்கும் பண விவகாரத்தில் கடந்த சில காலமாக மோதல் இருந்துவந்ததும் தெரியவந்தது. அந்தக் கையெழுத்தை வைத்து சோதித்துப் பார்த்ததில் அந்தக் கடிதத்தில் இருப்பது சேவியரின் கையெழுத்து எனத் தெரியவந்தது. இதையடுத்து சேவியர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
http://dlvr.it/Smz2wT
Monday, 24 April 2023
Home »
» கேரளாவுக்கு வரும் பிரதமர் மோடிக்குக் கொலை மிரட்டல் - முன்னாள் நண்பரைச் சிக்கவைக்க முயன்றவர் கைது!