சீனாவை விட்டுத் தனி நாடாக தைவான் பிரிந்துசென்றாலுமேகூட, தைவானை இன்னும் சீனா தனக்குட்பட்டதாகவே சொந்தம் கொண்டாடிவருகிறது. அதே சமயம், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதை சீனா தொடர்ந்து எதிர்த்துவருகிறது. ஆனால், தைவான் அதைக் கண்டுகொள்ளாமல், அமெரிக்காவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டிவருகிறது. இதன் காரணமாக, சீனா அவ்வப்போது, தைவான் எல்லையில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு அந்த நாட்டை அச்சுறுத்திவருகிறது.சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியுடன் தைவான் அதிபர் சாய் இங்-வென்
இப்படியான சூழலில், தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகத் தகவல் வெளியான உடனேயே, `தைவான் அதிபர் அமெரிக்காவுக்குச் சென்றால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும்' என தைவானைச் சீனா அச்சுறுத்தியது.
ஆனாலும், தைவான் அதிபர் அமெரிக்காவுக்குச் சென்று, அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியைச் சந்தித்தார். இதனால் தைவானின் வடக்கு, தெற்கு, கிழக்கில் மூன்று நாள்கள் போர் பயிற்சிகள் நடத்தப்படும் என சீனா அறிவித்தது.தைவான் - சீனா
அதனடிப்படையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக தைவானைச் சுற்றி இன்று காலையில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. இதன் காரணமாகத் தைவானில் பதற்றம் நிலவிவருகிறது. இந்த நிலையில், `தைவான் எங்கள் தாய்மண், அதைக் காக்க நாங்கள் போராடுவோம்' என தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
#Taiwan is our homeland, and no matter where we go or what we encounter, she is always charming and beautiful. Every story on this land is etched in our memories. We, #ROCArmedForces, are fighting with all our heart to defend our homeland and to protect our home together. pic.twitter.com/oI2eply6N6— 國防部 Ministry of National Defense, R.O.C. (@MoNDefense) April 9, 2023
இது குறித்து தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தைவான் எங்களின் தாய்மண். இந்த மண்ணின் ஒவ்வொரு கதையும் எங்களின் நினைவுகளில் பதிந்திருக்கின்றன. எங்களின் தாய்மண்ணையும், வீட்டையும் காக்க முழுமனதுடன் போராடுகிறோம்" என வீடியோவுடன் ட்வீட் செய்திருக்கிறது.தைவான்: கட்டாய ராணுவ சேவையை ஓராண்டாக நீட்டித்து உத்தரவு... சீன அச்சுறுத்தல் காரணமா?!
http://dlvr.it/SmFL1C
Monday, 10 April 2023
Home »
» ``எங்கள் தாய்மண்ணைக் காக்கப் போராடுகிறோம்" - சுற்றிவளைக்கும் சீனாவுக்கு தைவான் பதில்!