கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அகரகோட்டாலம் பகுதியில், 'மக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி' 23-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் தி.மு.க எம்.எல்.ஏ உதயசூரியன் கலந்துகொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது. அதிகாரியை திட்டிய எம்.எல்.ஏ உதயசூரியன்``அமைச்சர் பொன்முடி ஓசி என்று பேசியது வட்டார மொழி; அதனால் தவறில்லை" - சொல்கிறார் தனியரசு
அப்போது பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்துப் பேசிய எம்.எல்.ஏ உதயசூரியன், `போக்குவரத்துத்துறை சார்பாக கோப்புகள் தயார் செய்யப்பட்டு, விரைவில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்’ எனத் தெரிவித்தார். உடனே, `போக்குவரத்துத்துறை டி.எம் வந்திருக்கிறாரா... எங்கே இருக்கிறார்?’ எனக் கேட்டார். அப்போது, மேடை பக்கமிருந்த போக்குவரத்துத்துறையின் கள்ளக்குறிச்சி பணிமனை அதிகாரி, 'சார் இங்கே' என்று கூற, "நீதான் டி.எம்-மா... கண்டெக்டர், டிரைவர் எங்கே?" எனக் கேட்டார் எம்.எல்.ஏ உதயசூரியன்.
அதற்கு அந்த அதிகாரி, 'டி.ம் மெட்ராஸ் போயிருக்காரு சார்' என்றார். அதே சமயம், இந்த நிகழ்ச்சி சங்கராபுரம் பகுதியில் நடப்பதால், அந்தப் பகுதியின் பணிமனையைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர், "இதோ இருக்கிறேன் சார்" என்று மேடையின் எதிரிலிருந்து பதிலளித்தார். யார் எந்தப் பகுதி அதிகாரி என்றும் அறியாமல், கோபப்பட்ட எம்.எல்.ஏ., மேடை பக்கவாட்டு திசையிலிருந்து பதிலளித்த போக்குவரத்துத்துறை அதிகாரியைப் பார்த்து... "தோ இருக்காருயா...’" என்று திட்டினார். எம்.எல்.ஏ-வின் இந்தச் செயலைக் கண்டு மேடையில் அமர்ந்திருந்த மற்ற அதிகாரிகளும், அந்தப் பகுதி பொதுமக்களும் முகம் சுளித்தனர். கள்ளக்குறிச்சி முதல்வரின் தூக்கத்தை கெடுப்பதில் நம்பர் ஒன்: தொடரும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுகள்!
மக்கள் பிரதிநிதியாக இருக்கும் உதயசூரியன், அரசு விழாவில் போக்குவரத்துத்துறை அதிகாரியை அநாகரிகமாகத் திட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
மீண்டும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தூக்கத்தைக் கெடுக்கத் தொடங்கிவிட்டனரா கழக உடன்பிறப்புகள்?!
http://dlvr.it/Sn1zk8
Tuesday, 25 April 2023
Home »
» "தோ இருக்காருயா ..." - அரசு விழாவில் அதிகாரியைத் திட்டிய திமுக எம்.எல்.ஏ உதயசூரியன்; நடந்தது என்ன?