ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடைவிதிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு, ஒருவழியாக ஏப்ரல் 10-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். கூடவே, அகில இந்திய கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பும், கேம்ஸ்க்ராஃப்ட் (Gameskraft) என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனமும் தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.ஆன்லைன் ரம்மி
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜா, பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பிலிருந்து, ``ரம்மி உள்ளிட்டவை திறமைக்கான விளையாட்டுகள், சூதாட்டமல்ல. தமிழ்நாட்டில் புகையிலை, மது போன்றவற்றைத் தடை செய்யாத நிலையில், ஆன்லைன் ரம்மியை மட்டும் அரசு தடைசெய்திருக்கிறது. எனவே இதை ரத்துசெய்ய வேண்டும்.
அதோடு இந்த வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், தினசரி மில்லியன் கணக்கில் இழப்பு ஏற்படும்" என நீதிபதிகளிடம் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ``மக்களைப் பாதுகாக்கவே அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், பிற இழப்புகளைத் தடுக்க அரசு சட்டம் கொண்டுவந்ததில் என்ன தவறு" எனக் கருத்து தெரிவித்துக் கேள்வியெழுப்பினர்.சென்னை உயர் நீதிமன்றம்
அதேசமயம் மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ``தமிழ்நாடு அரசின் விளக்கத்தைக் கேட்காமல் இதில் எந்தவோர் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது" எனக் கூறி ஆறு வாரங்களுக்குள் தமிழ்நாடு அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.நீதிமன்றத்தில் தாக்குப்பிடிக்குமா ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்? - தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?!
http://dlvr.it/SnC7cH
Friday, 28 April 2023
Home »
» ஆன்லைன் சூதாட்டம்: `தமிழக அரசு தடைச் சட்டம் இயற்றியதில் என்ன தவறு?' - சென்னை உயர் நீதிமன்றம்