தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில், செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது,"தெலங்கானா மக்களுக்குப் பலன் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை மத்திய அரசு செயல்படுத்துகிறது. ஆனால் மாநில அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தெலங்கானாவின் உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். கே.சந்திரசேகர் ராவ்
தெலங்கானா குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றுவதை எங்கள் கடமையாக இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கருதுகிறது. ஆனால், மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைக்காதது எனக்கு வேதனை அளிக்கிறது. இது தெலங்கானா மக்களின் கனவுகளை பாதிக்கிறது. தெலங்கானா மக்களுக்காகத் திட்டமிடப்பட்டிருக்கும் வளர்ச்சிகளில் எந்தத் தடையையும் அனுமதிக்கக் கூடாது என்று மாநில அரசுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். வாரிசு அரசியலும், ஊழலும் வேறுபட்டவை அல்ல. வாரிசு அரசியல் இருக்கும் இடத்தில் ஊழல் வளரத் தொடங்குகிறது" எனக் குற்றம்சாட்டிப் பேசியிருக்கிறார்.சி.பி.ஐ: பாராட்டும் பிரதமர் மோடி... கொதிக்கும் எதிர்க்கட்சிகள்! - பின்னணி என்ன?!
http://dlvr.it/SmCNbP
Sunday, 9 April 2023
Home »
» தெலங்கானா: ``மக்களுக்கான வளர்ச்சித் திட்டத்துக்கு மாநில அரசு தடையாக இருக்கிறது" - பிரதமர் மோடி