பா.ஜ.க ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள், அந்த மாநில அரசுகளுக்கு எதிராகச் செயல்படுவதாக அடிக்கடிக் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் ஆளுநருக்கெதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்த பிறகு, பல நாள்களாகக் கிடப்பில் இருந்த அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென ஒப்புதல் அளித்தார்.ஆன்லைன் ரம்மி: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்
அதேபோல தெலங்கானாவிலும் ஆளுநரால் மசோதாக்கள் கிடப்பில்போடப்பட்டதால் ஆளுங்கட்சி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றதையடுத்து, மூன்று மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தனித் தீர்மானம் நிறைவேற்றுமாறு பா.ஜ.க அல்லாத மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், ``இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் இருக்கிறது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்துவருவதையும் காண்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், ஒன்றிய, மாநில அரசுகளின் கடமைகளையும், பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும்போதிலும், அவை இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை. அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால், அந்தந்த மாநில நிர்வாகச் செயல்பாடுகள் அந்தக் குறிப்பிட்ட இடங்களில் முடங்கிப்போயிருக்கின்றன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்வதற்கான மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு, ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களைப் பலமுறை தெளிவுபடுத்தியும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதே நிலைதான், பல்வேறு மாநிலங்களிலும் நீடிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அந்தந்த மாநிலச் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசு மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும். அது சம்பந்தமாக 10-4-2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் கடித்துடன் இணைத்து அனுப்பியிருக்கிறேன்.முதல்வர் ஸ்டாலின்
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நோக்கம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும். தங்கள் மாநில சட்டமன்றத்திலும் இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள், சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்காக, தங்கள் ஆதரவை வழங்கும் என்று நம்புகிறேன்" என ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.மோடி சவுத் ஸ்கெட்ச்... ஸ்டாலின் சரண்டரா... ராஜதந்திரமா?! - பதறும் ஆர்.என் ரவி! | Elangovan Explains
http://dlvr.it/SmPtDK
Thursday, 13 April 2023
Home »
» மசோதாக்களைக் கிடப்பில் போடும் ஆளுநர்கள்; பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதிய ஸ்டாலின்!