சீனாவுக்குச் சொந்தமான ஐந்து விமானங்களையும், நான்கு கப்பல்களையும் தங்களுடைய தீவுப் பகுதிக்கு அருகே கண்டுபிடித்ததாக தைவான் அரசின் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.கைது
சவுதியில், ஒரு நபரைக் கொன்று, எரித்த குற்றத்துக்காக ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ரமலான் மாதத்தில் பொதுவாக மரண தண்டனைகள் வழங்கப்படாத நிலையில், தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது பிரபலமடைந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ChatGPT-ஐ இத்தாலி தற்காலிகமாகத் தடைசெய்திருக்கிறது. தனிப்பட்ட தகவல்கள் குறித்த பிரச்னையால் இந்த முடிவை அந்த நாட்டு அரசு எடுத்திருக்கிறது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள துணி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.டிக் டாக்
பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு தொடர்பான தொழில்நுட்பக் கருவிகளிலிருந்து சீன செயலியான டிக் டாக்கை நீக்க ஆஸ்திரேலிய அரசு முடிவுசெய்திருக்கிறது.
ரஷ்யாவில் 14 வயதேயான சிறுமி, தன் தாயைக் கொலைசெய்ய கூலிப்படையை நாடியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தன் காதலருடன் உறவை முறித்துக்கொள்ள, அவரின் தாய் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அந்தப் பெண் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
மலேசியாவில் கட்டாய மரண தண்டனை, ஆயுள் தண்டனையை நீக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி காப்பாற்றப்பட்ட இரண்டு மாதக் குழந்தை, அதன் தாயிடம் ஒப்படைப்பட்டது. இந்தச் செய்தியை உக்ரைன் அமைச்சர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அமெரிக்க எல்லையில் பறந்த சீன உளவு பலூன் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருவதாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.
பிரின்ஸ் ஹாரியின் மனைவி மேகன் மார்கல், 2023- ம் ஆண்டுக்கான `வுமன் ஆஃப் விஷன்' விருதைப் பெறுகிறார்.
http://dlvr.it/Sm1QFV
Wednesday, 5 April 2023
Home »
» ChatGPT-க்கு `நோ' சொன்ன இத்தாலி | மேகன் மார்கலுக்கு விருது - உலகச் செய்திகள்