அண்ணாமலையின் ஊழல் பட்டியல் அறிவிப்பும் 'ஆருத்ரா' ரகசிய விசாரணை பின்னணியும்!
அண்ணாமலை
கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதியன்று தென்காசியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் தி.மு.க.வை சேர்ந்த 27 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தற்போதைய அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாகவும், இவர்கள் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ஊழல் செய்து வைத்துள்ளனர் என்றும் கூறி இருந்தார்.
இதனிடையே, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், தமிழ்நாடு பா.ஜ.க-வின் விளையாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தவருமான ஹரீஷ் என்பவரைக் கைதுசெய்திருக்கிறது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ். அதே சமயம், " ஆருத்ரா விவகாரம் முற்றினால், டெல்லி வரை குற்றச்சாட்டுகள் நீளும் என்பதால், இந்த பெரிதாக்காமல் தடுக்க தி.மு.க-வினரோடும் பேச்சுவார்த்தையை டெல்லியிலுள்ள சில தலைவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்" என்ற தகவல் கடந்த இதழ் ஜூனியர் விகடனில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் மிஸ்டர் கழுகு தரும் 'யாரை காப்பாற்ற ரகசிய விசாரணை?' என்ற
எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
"அவர் நல்லவர்..." - பல் பிடுங்கிய ஏ.எஸ்.பி-க்கு ஆதரவான பேனரால் பரபரப்பு!பல்வீர் சிங் ஆதரவு பேனர்
குற்றவழக்குகளில் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வருபவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங் பிடுங்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து மனித உரிமை ஆணையம், சப்-கலெக்டர் விசாரணை நடந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீண்டும் அம்பாசமுத்திரம் பகுதியில் பணியமர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிராமத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான தகவல்களுடன் கூடிய கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
'மேய்க்கிறது மாடு, இதுக்கு எதுக்கு ஆடிட்டர் ரிப்போர்ட்?'- தாட்கோ மேலாளரின் வைரல் வீடியோ
பட்டியல் சமூக மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்குடன் மாவட்ட வாரியாக செயல்பட்டு வருகிறது தாட்கோ திட்டங்கள். சுயமாக முன்னேற நினைக்கும் பட்டியலின மக்களும், இளைஞர்களும் தாட்கோ மூலம் மானியத்துடன் வங்கி கடன் பெற்று, அடுத்த கட்டத்திற்கு செல்வதுண்டு.
இந்த கடனை பெறுவதற்குள் லஞ்ச லாவண்யம், வரன்முறைகள் என அம்மக்கள் படும்பாடும் தனி என்றால், விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளரோ (பொறுப்பு) கடனுதவி கேட்ட இளைஞரை ஒருமையில் பேசி, திட்டிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
பாஜகவுக்கு எதிராக மம்தா திடீர் பாய்ச்சல்... பின்னணி என்ன?
மம்தா பானர்ஜி
சில மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசு மீதான மம்தாவின் எதிர்ப்பில் மென்மைத்தன்மை வெளிப்பட்டது.
இந்த நிலையில், மத்திய பாஜக அரசை வீழ்த்த டெல்லி நோக்கி பேரணி செல்லத் தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா கர்ஜித்திருக்கிறார்.
மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் திடீர் கோபமும் போராட்டமும் ஏன்..?
விரிவான அலசலுடன் கூடிய கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க...
"பெரியார் இருந்திருந்தால் உதயநிதியை..." - விகடன் டிரெண்டிங் செய்திகள்...
உதயநிதி ஸ்டாலின்
'தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள்..!
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சூர்யா!
மேலும் ஒரு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக உத்தரவு!
"பெரியார் இருந்திருந்தால் உதயநிதியை உச்சி முகர்ந்திருப்பார்" - சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு
கலாஷேத்ரா இயக்குநர் ஆஜராக மகளிர் ஆணையம் உத்தரவு!
சுங்கச் சாவடி கட்டணம் குறித்து அமைச்சர் எ.வ வேலு விளக்கம்!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
உபயோகிக்காத கிரெடிட் கார்டு... உஷார்!
கிரெடிட் கார்டு
"வங்கியிலிருந்து கடன் அட்டை (Credit Card) வாங்கி அதை உபயோகப்படுத்தாமல் வைத்து விட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?"
- வாசகரின் இந்த கேள்விக்கு இன்று வெளியான நாணயம் விகடன் இதழில் ஆடிட்டர் வி.தியாகராஜன் சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க...
'இன்னொரு கோவிட் பூஸ்டர் டோஸ்' - WHO சொல்வது என்ன?
தடுப்பூசி
தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தடுப்பு நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...
மிஸ்டர் மியாவ்: விஜய் படம்... அடுத்து யாருக்கு வாய்ப்பு?
நடிகர் விஜய்
சொந்தமாகப் படம் இயக்கத் தயாராகிவரும் தனுஷ், தான் உருவாக்கிய கதையை முதலில் சொன்னது விஷ்ணு விஷாலிடம்தானாம். கதை மிகவும் பிடித்துப்போக, தனுஷுக்கு சகோதரராக நடிக்க விஷ்ணு விஷாலும் உடனே சம்மதித்திருக்கிறார். தயாரிப்பாளர் கிடைப்பது தாமதமாக, ஐஸ்வர்யா ரஜினி 'லால் சலாம்' படத்தில் நடிக்க விஷ்ணு விஷாலை அழைத்திருக்கிறார்.
இது குறித்து மிஸ்டர் மியாவ் தரும் மேலும் சுவாரஸ்யமான தகவல்கள்...
விரைவில் தொடங்கும் 'குற்றப் பரம்பரை'!
ஐஸ்வர்யா லட்சுமி கொடுத்த 'பொளேர்' பதில்!
விஜய் படம்... அடுத்து யாருக்கு வாய்ப்பு?
சின்ன தலைவியைச் சீண்டிய வெப் சீரீஸ்!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க...
http://dlvr.it/SlsFrf
Sunday 2 April 2023
Home »
» Mr. கழுகு: 'ஆருத்ரா' ரகசிய விசாரணை பின்னணி! - தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள் - Credit Card: உஷார்!