கேரளா: ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உ.பி-யில் கைது!
கேரள ரயிலில் பயணிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரயிலில் தீ வைத்து, தப்பித்தவர் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வந்த நிலையில், ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த ஹாருக் சைபி என்பவர் உத்தரப்பிரதேசம், புலந்த்சகர் மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
`அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ரத்து' - கட்சித் தலைமை அறிவிப்பு
அ.தி.மு.க-வில் உட்கட்சிபூசல் நிலவிவரும் சூழலில், வரும் 7-ம் தேதி நடைபெறவிருந்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ஒருசில காரணங்களால் ரத்துசெய்யப்படுவதாக அ.தி.மு.க தலைமை அறிவித்திருக்கிறது.
கலாஷேத்ரா விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு
கலாஷேத்ரா விவகாரம்
கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள்மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு அமைத்தது கலாஷேத்ரா அறக்கட்டளை. ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பிடித்திருக்கின்றனர்.
`காங்கிரஸ் தன்னைச் சரிசெய்துகொள்ள வேண்டும்'
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் ஜனதா தளம் வெற்றிபெறும். நாங்கள் பிரித்தாலும் கொள்கை அடிப்படையில் ஓட்டுக் கேட்கவில்லை. அனைவருக்குமான வளர்ச்சியின் அடிப்படையில் ஆதரவு கேட்கிறோம். தேசியக் கட்சிகள் பெரிய திட்டங்களை இங்கு செயல்படுத்தியதாகப் பொய் சொல்கிறார்கள். அவர்களின் நாடகத்தையும் பொய்களையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.தேவகவுடா
பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தலுக்கும், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கர்நாடக சட்டசபைத் தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். நம் நாட்டில் காங்கிரஸ் மட்டுமே எதிர்க்கட்சி அல்ல. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் விஷயத்தில் காங்கிரஸ் முதலில் தன்னைச் சரிசெய்துகொள்ள வேண்டும். இன்றைக்கு எதிர்க்கட்சிகளுக்குப் பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. நாட்டுக்குத் தலைமை தாங்கும் திறன்கொண்ட தலைவர்கள் அதிகமாகியிருக்கின்றனர். ராகுல் காந்தி பதவிநீக்கம் குறித்து நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், அவரின் பதவிநீக்கம் செய்தது துரதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்” என்றார்
http://dlvr.it/SlyP8Y
Tuesday, 4 April 2023
Home »
» Tamil News Live Today: கேரள ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த நபர் உத்தப்பிரதேசத்தில் கைது!