கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, தன் குடும்பத்தினருடன் வந்து பார்வையிட்டார்!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, தன் குடும்பத்தினருடன் வந்து பார்வையிட்டார். அவருடன் ஜோதிகா, சிவகுமார் ஆகியோர் வந்திருந்தனர். மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் அவர்களுடன் வந்திருந்தார்.
பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டாவைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
பாஜக @BJP4India தேசிய தலைவர் மதிப்பிற்குரிய திரு.@JPNadda ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். pic.twitter.com/2AO2JQ5p5U— Dr.L.Murugan (@Murugan_MoS) April 1, 2023
`தமிழகத்தில் மேலும் எட்டு மாவட்டங்கள் உருவாக வாய்ப்பு!’
சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதிய மாவட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. சேவூர் ராமச்சந்திரன், கோவி.செழியன் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து, ஆரணியைத் தனி மாவட்டமும், கும்பகோணத்தைத் தனி மாவட்டமாகவும் உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தமிழகத்தில் எட்டு மாவட்டங்களை உருவாக்க ஆலோசித்துவருவதாகத் தெரிவித்தார். ``எட்டு மாவட்டங்களை உருவாக்க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிதி நிலைமைக்கு ஏற்ப இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்தார்.
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது!
காஸ் சிலிண்டர்
சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூபாய் 76 குறைந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு வணிக காஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 2,268-ஆக இருந்தது, இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வந்த பிறகு, ஒரு வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 2,192 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/Slq8L1
Saturday, 1 April 2023
Home »
» Tamil News Today Live: கீழடி அருங்காட்சியகத்தை, தன் குடும்பத்தினருடன் வந்து பார்வையிட்ட நடிகர் சூர்யா!