சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு உள்துறை மானியக் கோரிக்கைமீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில், அ.தி.மு.க., தி.மு.க என இரு கட்சியினரும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடங்கி பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் பட்டியலிட்டனர்.
மானியக் கோரிக்கையின்போது எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதில் கூறினார். அப்போது, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு `எனக்கு அது பற்றிய தகவல்கள் எதுவும் நேரடியாக வரவில்லை. நானும் செய்திகளில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்" என்றார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``நான் அப்போது ஆய்வுக் கூட்டத்தில் இருந்தேன். அதனால் என் உதவியாளர் அதைச் செய்தியில் பார்த்த தகவலை என்னிடம் கூறினார். அதை நான் செய்தியாளர்களிடம் கூறினேன். அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், `தூத்துக்குடி சம்பவம் நிகழ்வதற்கு சரியாக மூன்று நாள்களுக்கு முன்பிலிருந்தே ஐ.ஜி அவர்கள், அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்னும் தகவலை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஒவ்வொரு நிமிடமும் வழங்கினார்' எனத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது” என்றார்.
உடனே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று அந்த மாவட்ட மக்கள் போராடிவருகின்றனர்.எனவே, அ.தி.மு.க கட்சியில் மட்டும் அவர்கள் போராட்டம் நடத்தியதாகக் கூற வேண்டாம். அந்த இறுதி நாளில், சுமார் 2,000-க்கும் அதிகமான காவலர்கள் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவரால் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. ஆனால், தடை உத்தரவையும் மீறி போராட்டத்தை நடத்துவோம் என்று இப்போதைய அமைச்சராக இருப்பவர், அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அறிவித்தார். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அதனால்தான் விரும்பத்தகாத நிகழ்வு நடந்தது” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி“ஆறுமுகசாமி அறிக்கையில் உப்புச்சப்பில்லை... அருணா ஜெகதீசன் அறிக்கை படுஜோர்!”
இதற்கு விளக்கமளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “உண்மைக்குப் புறம்பான செய்திகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். நூறு நாள்களாக மக்கள் ஸ்டெர்லைட் மூடுவது தொடர்பாகப் போராடிவந்தனர். அது தொடர்பாக மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களோ, முதல்வரோ மக்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. ’இறுதிநாள் போராட்டம்’ என மக்கள் அறிவிக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் அவருடன் கைகோத்து போராட்டம் நடத்தினேன். நாங்கள் போராட்டத்தைத் தொடங்கிய இடத்தில் 144 தடை உத்தரவு இல்லை. மேலும், இது அ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேடு" என்று சாடினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “144 தடை உத்தரவு போடப்பட்ட பின்பும் சட்டமன்ற உறுப்பினர் எப்படி அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்... இது தவறில்லையா... அங்கு பிரச்னை நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது” என்றார்.கீதா ஜீவன்
அப்போது எழுந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “நீங்கள் 144 தடை உத்தரவு போடப்பட்ட இடத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் சென்றார் என்கிறீர்கள். சரி... அப்படியே தடைபோடப்பட்ட இடத்தில் கூடியிருந்தால், வண்டி மேல் நின்று சுடுவதா..?" என்னும் கேள்வியை முன்வைத்தார்.
இதற்கு விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி, “மிகவும் அனுபவம் வாய்ந்த அவை முன்னவர் இது போன்ற வார்த்தைகளை இங்கே குறிப்பிடுவது தவறு. இது தொடர்பான வழக்கு இன்றும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. எப்படி இது பற்றி இங்கு பேச முடியும்... இதைப் பேசினால், தி.மு.க ஆட்சியில் எப்போதெல்லாம் துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதை பற்றி நாங்களும் விரிவாகச் சொல்லவேண்டிய சூழல் வரும்” என்றார்.
மீண்டும் எழுந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நீதியரசர் அருணா ஜெகதீசன் வழங்கிய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது... ’காக்கா, குருவியைப்போல அங்கிருந்த மக்களை வண்டி மேலே நின்று பொசிஷன் எடுத்து ஒரு போரில் போய் எதிரிகளைச் சுடுவதுபோலச் சுட்டார்கள்' என்று கூறப்பட்டிருக்கிறது" என்றார்.
இது குறித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “நூறு நாள்களாக அங்கு போராட்டம் நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் ஏன் அவர்களை அழைத்துப் பேசவில்லை... அந்தத் துறை அமைச்சர் ஏன் அதில் தலையிடவில்லை... 100-வது நாளில் மாவட்ட ஆட்சித்தலைவரைக் காண அவர்கள் பேரணியாகச் சென்றார்கள்” என்றார்.சட்டப்பேரவை | ஸ்டாலின் | துரைமுருகன்
அதற்கு பதிலளித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``எங்கள் ஆட்சியில் கிட்டத்தட்ட 14 முறை போராட்டம் நடத்திய மக்களை அழைத்துப் பேசியிருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் பேசியிருக்கிறார்... சார்பதிவாளர்கள் தொடங்கி தாசில்தார் என அனைவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டதால்தான் இந்தப் பிரச்சனை எழுந்தது. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் ஸ்டெர்லைட் மூடப்பட்டது" என்றார்.
அப்போது எழுந்த முதல்வர், “முதலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது யார் ஆட்சியில்... முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது” என்று பதிலளித்தார். எடப்பாடி பழனிசாமி
அப்போது எடப்பாடி பழனிசாமி, “திருநெல்வேலி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் கூலி உயர்வு கேட்டு, போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியது. அதிலிருந்து தப்பிக்க தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேரை மாய்த்து ’மாஞ்சோலை படுகொலை’ நடத்தியது தி.மு.க அரசுதான். அதேபோல மின்சாரக் கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்திய விவசாயிகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதும் தி.மு.க அரசுதான். உங்கள் ஆட்சியில் எத்தனை முறை துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதை எங்களாலும் தெளிவாக, தரவுகளுடன் கூற முடியும்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.மாஞ்சோலை படுகொலை
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் வேலு, “எதிர்க்கட்சித் தலைவர் வரலாற்றை மாற்றிப் பேசுகிறார். ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று போராடி விவசாயிகளை சுட்டுக் கொன்றது அ.தி.மு.க அரசு. கல்லூரி மாணவர்களை, பேருந்தில்வைத்து எரித்ததும் அ.தி.மு.க அரசுதான்" எனச் சாடினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``அனைத்து ஆட்சிகளிலும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் வருகின்றன. அ.தி.மு.க ஆட்சியில் மட்டும் நடப்பதுபோலப் பேச வேண்டாம்” என்றார்.
உடனே முதலமைச்சர் ஸ்டாலின், ``எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒவ்வோர் ஆட்சியிலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்புதான். ஆனால், தவறு நிகழ்ந்தவுடன் அதைச் சரிசெய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பது இந்த ஆட்சிதான்" என்றார்.`நாங்க என்ன இங்க வெட்டியாக உட்காந்திருக்கோமா?’ - காட்டமான எடப்பாடி பழனிசாமி | சட்டசபை ’காரசாரம்’
http://dlvr.it/Smqynb
Friday, 21 April 2023
Home »
» `யார் ஆட்சியில் துப்பாக்கிச்சூடுச் சம்பவங்கள் அதிகம்!' - திமுக Vs அதிமுக... அனல் பறந்த விவாதம்