பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம் (PGIMER's National Institute of Nursing Education) சண்டிகரில் அமைந்திருக்கிறது. அங்குள்ள அனைத்து நர்சிங் மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 30-ம் தேதி பிரதமர் மோடியின் 100-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் முதல் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் நர்சிங் முதலாம் ஆண்டு பயிலும் 8 மாணவிகள், இறுதி ஆண்டும் பயிலும் 28 மாணவிகள் என 36 பேர் இதில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
அந்த நிகழ்வில் கலந்துகொள்ளாததற்கு, மாணவிகள் எந்தக் காரணத்தையும் தெரிவிக்காததால், அந்தக் கல்லுரியின் அதிகாரிகள் அவர்களை ஒரு வாரத்துக்கு விடுதியைவிட்டு வெளியே வரக் கூடாது எனத் தண்டனை அளித்திருக்கிறார்கள்.
இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம், "மாணவிகளுக்கு நிகழ்ச்சிகளை நடத்த விருந்தினர்கள், சிறந்த பேச்சாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர் வருவார்கள்.
இது பாடத்திட்டத்தின் ஒரு பகுதி. பிரதமரின் `மன் கி பாத்' நிகழ்வுக்கு வர வலியுறுத்தியது வழக்கமான பாடத்திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதி. இதற்கு வேறு எந்த அர்த்தத்தையும் கொடுத்து, பெரிய பிரச்னையாக்க வேண்டாம்" என விளக்கமளித்திருக்கிறது. ஆனால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.மஹுவா மொய்த்ரா
இதற்கிடையே, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி ஒலிபரப்பான `மன் கி பாத்' நிகழ்ச்சியை மங்கி பாத் (monkey baat ) எனக் கிண்டல் செய்திருக்கிறார். மேலும் ``நானும் (monkey baat ) இதைக் கேட்கவில்லை. எப்போதும் கேட்டதில்லை. நானும் தண்டிக்கப்படப் போகிறேனா... ஒரு வாரத்துக்கு நான் வீட்டை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்படுமா?" எனத் தெரிவித்திருக்கிறார்.மன் கி பாத்: ``அதற்கு மிகப்பெரிய மனம் வேண்டும்!” - திருப்பூர் தாயம்மாள் குறித்து பிரதமர் மோடி
http://dlvr.it/Snyyq4
Saturday, 13 May 2023
Home »
» பிரதமரின் 100-வது `மன் கி பாத்' நிகழ்ச்சி; ஒலிபரப்பைக் கேட்காத 36 நர்சிங் மாணவிகள்மீது நடவடிக்கை!